நெல்லிக்குப்பம் :
நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் மாணவர் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் டேனிஷ்மிஷன் மேல்நிலைப் பள்ளி ஆற்காடு லூத்தரன் திருச்சபை நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. இப்பள்ளியில் போதுமான கட்டடமும், ஆசிரியர்களும் உள்ளனர். இங்கு 2,000 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பெரும்பாலும் ஏழை, எளிய மாணவர்களே இப்பள்ளியில் படிக்கின்றனர். அனைத்து வசதிகள் இருந்தும் ஆசிரியர்களுக்குள் இருக்கும் கோஷ்டி பூசல் மற்றும் கற்கும் திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத் தப்படுவதில்லை.
மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. அதனால் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது என தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த தலைமையாசிரியர் ஆல்பிரட் முயற்சி மேற்கொண் டுள்ளார். எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் கற்கும்திறன் குறைந்த மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தினமும் சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் "மாணவர்களின் நலனில் பெற்றோர்களும் அக்கறை செலுத்த வேண்டும். தங்கள் பிள்ளைகள் ஒழுங்காக படிக்கிறார்களா என கண்காணிக்க வேண்டும். சிறப்பு வகுப்புகள் நடத்த பெற்றோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்' எனவும் தலைமையாசிரியர் கேட்டுக் கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக