உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

கடலூர் அருகே மினி லாரி கவிழ்ந்து 50 பேர் படுகாயம்

கடலூர் : 

                  கடலூர் அருகே மினி லாரி கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

             கடலூர் அடுத்த சமுட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். குறவன்பாளையத்தில் உள்ள இவரது உறவினர் வீடு கிரகப்பிரவேசம் நேற்று நடந்தது. விசேஷத்தில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வீரப்பன் மற்றும் சமுட்டிக்குப்பத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட் டோர் மினி லாரியில் குறவன்பாளையம் சென்றனர். லாரியை குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஓட்டினார். ஒதியடிக்குப்பம் அருகே வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி நிலை தடுமாறி கவிழ்ந்தது. அதில் மினி லாரியில் பயணம் செய்த சமுட்டிக்குப்பத்தைச் சேர்ந்த சவுந்தலா (50), அஞ்சம்மாள் (40), தேவசுந்தரி (50), காந்திமதி (35), அம்சவள்ளி (27), இளஞ்சியம்(55), கல்பனா (25), செல்வராணி (45), பாக்கியம், ஆரியமாலா, காந்திமதி, புஷ்பா உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த கலெக்டர் சீத்தாராமன் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். டி.ஆர்.ஓ., நடராஜன், தாசில்தார் தட்சணாமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். 

அமைச்சர் சார்பில் ஆறுதல்: 

                     அமைச்சர் சார்பில் அவரது உதவியாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர். விபத்து குறித்து நடுவீரப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior