மங்களூர் :
மங்களூர் ஒன்றியம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இந்த ஒன்றியத்தைச் சுற்றி மலையனூர், அடரி,பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், கீழ்ஒரத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட உட்கிராமங்கள் அமைந்துள்ளன. ஒன்றிய தலைமையிடமாக உள்ள மங்களூரில் இருந்து மாங்குளம் வரை ஐந்து கி.மீ., தார்சாலை உள்ளது.
இந்த சாலையின் வழியாக மங்களூருக்கு அன்றாட அலுவல் காரணமாக உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், மாணவ, மாணவிகள், நோயாளிகள் சென்று வருகின்றனர். மேலும், ஏ.சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிச் செல்லும் டிராக்டர்கள், லாரிகள் என 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
பல்வேறு கிராமங்களுக்கு செல் லும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த சில ஆண் டுகளாக குண்டும், குழியுமாகவும் "மெகா' சைஸ் பள்ளமாக மாறி சிதைந்து போய் போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் முதல் கனரக வாகனங்களில் செல்பவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப பாக இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து மாங்குளம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் கூறுகையில்,
"எங்களின் அன்றாட அலுவல்களுக்காக மங்களூர் செல்ல இச்சாலையை பயன்படுத்தி வந் தோம். பல ஆண்டுகளுக்கு மன் நெடுஞ்சாலை துறை மூலம் கிராம சாலை அபிவிருத்தி திட்டத் தில் சீரமைக்கப்பட்டிருந்த இந்த ஐந்து கி.மீ., சாலை தற்போது மாங்குளம் பகுதி தெடக்கத்தில் இருந்தே சீர்கெட்டுபோய் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிறுபாக்கம், மலையனூர், கிராமங்களை சுற்றிக்கொண்டு 14 கி.மீ., பயணம் செய்து மங்களூருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது தாமதமில்லாமல் சாலையை செப்பனிட வேண்டும்' என கூறினார்.
மாங்குடிகாடு விவசாயி ராஜேந்திரன் கூறுகையில்,
"இப்பகுதி மக்களுக்கு இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது முற்றிலும் சேதமடைந்த இந்த சாலையை சீரமைக்க வேண்டும்' என கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக