நெய்வேலி :
"என்.எல்.சி., அதிகாரிகளை கடத்துவோம்' என்று பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் ஆவேசமாக பேசினார்.
என்.எல்.சி., பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் முதல் அனல் மின் நிலையம் அருகே "கியூ' பாலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரதம் நடக்கிறது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உண்ணாவிரத்தில் மயக்கமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டனர்.
நேற்று மாலை பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் பங்கேற்று பேசியதாவது:
என்.எல்.சி.,ஒப்பந்த தொழிலாளர்களுக்காக அறவழியில் போராடும் எங்களை தீவிரவாதிகளாக மாற்றாதீர்கள். 48 மணி நேரத்திற்குள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இல்லையெனில் என்.எல்.சி., சேர்மன் மற் றும் இயக்குனர்கள் வீடு, கார் களை அடித்து நொறுக்கி அவர் களை கடத்துவோம். எங்கள் மீது எந்த வழக்கு போட்டாலும் கவலை இல்லை. இதை கலெக்டரிடம் தெரிவித்துவிட்டு தான் நானும் உண் ணாவிரத்தில் பங்கேற்றுள் ளேன்.நான் அமைதியாக இங்கு உண்ணாவிரதம் இருப்பேன். ஆனால் என்னுடைய ஆட்கள் வெளியில் வேலை பார்ப் பார் கள். குறிப்பாக முந்திரிக்காட்டில் வேலை பார்ப்பார்கள். யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலை இல்லை. நான் வெளிப் படையாக பேசுபவன். இந்த பேராட்டத்திற்கு வலுசேர்ப்பதற்காக அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,- வி.சி., என அனைவரையும் ஒன்று திரட்டி போராடுவோம்.
நான் அனுப்பும் பேச்சுவார்த்தை குழுவினருடன் என்.எல்.சி., நிர்வாகம் உடனடியாக பேச்சு வார்த்தை நடந்தி சுமூகமாக முடிக்காவிட்டால் "ஏசி' கார்களில் செல்லும் என்.எல்.சி., அதிகாரிகளின் உயிர்களுக்கு என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியாது. என் மீது கொலை வழக்கு போட்டாலும் அதை சந்திக்கத் தயார். மாவட்டத்தில் உள்ள அனைத்து பா.ம.க.,வினரையும் ஒன்று திரட்டி எனது தலைமையில் என்.எல்.சி.,யை கலவர பூமியாக மாற்றுவேன். இதையும் கலெக்டரிடம் கூறியுள்ளேன். எங்களை உதாசீனப்படுத்துபவர்கள் உயிருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுங்கள். தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் பா.ம.க., நிறுவனரிடம் கலந்து பேசி அவரது ஆலோசனையின்படி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். எம்.எல்.ஏ., பதவி எனக்கு சாதாரணமானது. நான் எதற்கும் கவலைப்படுபவன் கிடையாது. எனவே 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களுக்காக நடக்கும் இப்போராட்டத்தில் நாளை (இன்று) அனைவரும் பங்கேற்க வேண்டும். எந்த ஒப்பந்த தொழிலாளியும் வேலைக்கு செல்லக் கூடாது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக பா.தொ.ச., நிரந்தர தொழிலா ளர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பர். இவ்வாறு எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக