உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இணை மின் உற்பத்தி மூலம் 3 லட்சம் யூனிட் மின்சாரம்'

சேத்தியாத்தோப்பு : 

                  எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இணை மின் உற்பத்தி மூலம் 3 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வீடி யோ கான்பரன்ஸ் மூலம் இணை மின் உற்பத்தி துவக்க திட்டம் துவங்கப் பட்டது.

இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலையின் ஆட்சியர் ஆசியா மரியம் கூறியதாவது : 

               சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை தற்போது நாள் ஒன்றுக்கு 2,500 டன் கரும்பு அரவை திறனுடன் 7.5 மெகாவாட் கொண்ட மின் உற்பத்தி திட்டத்துடன் செயல்படுகிறது. ஆசியா கண்டத்திலேயே முதன் முதலாக இந்த ஆலையில் கரும்பு சக்கையை எரிபொருளாக கொண்டு மின் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டு 1992ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இயங்கி வருகிறது. 2009-2010ம் ஆண்டு அரவை பருவத்தில் 2 லட்சத்து 600 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ் நாடு மின்சார வாரியம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. 3 லட்சசம் யூனிட் திறனை மேலும் அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் 15 மெகாவாட் திறனுடன் கூடிய நவீனமயமாக்கல் மற்றும் இணை மின்உற்பத்தி திட்டம் 81.23 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

                     இந்த திட்டத்தின் மூலம் அரவையில்லா பருவத்தில் நாள் ஒன்றுக்கு 2 லசட்சம் யூனிட்களும், அரவை பருவத்தில் 3 லட்சம் யூனிட்களும் மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட உள்ளது. நவீன தொழில் நுட்பம் கரும்பு அரவை பருவத்தில் கரும்பு சக்கை மூலமும், அரவையில்லாத பருவத்தில் நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்தி இணை மின் உற்பத்தி இயங்குவதற்கு ஏதுவாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு ஆசியா மரியம் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior