உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

பெயிலான மாணவர்களுக்கு பாஸ் போட பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் வலியுறுத்தல்

கடலூர் : 

                 முதல் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை "பெயில்' ஆக்கக் கூடாது என்ற ஐகோர்ட் உத்தரவையடுத்து "பாஸ்' போடுமாறு பெயிலான மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

                    மத்திய அரசின் உத்தரவுப்படி 14 வயது வரை கட்டாய இலவச கல்வி நடைமுறையில் இருப்பதால் முதல் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களை "பெயில்' ஆக்க கூடாது எனவும், தேர்வு என்பது பாசாவதற்கு எந்த விதத்திலும் தடையாக இருக்க கூடாது எனவும் ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 வகுப்பில் அதிக மார்க்குகள் பெற்று நூறு சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக் கத் திலேயே செயல்படுகின்றனர்.

                   அதற்கு இடையூறாக உள்ள பள்ளி மாணவர்களை பெயிலாக்குவதும், சரியாக படிக்காத மாணவர்களை டி.சி., கொடுத்து வேறு பள்ளிகளுக்கு அனுப்பியும் வருகின்றனர். பள்ளிக்கு நல்ல பெயர் எடுப்பது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு மாணவர்களை 7ம் வகுப்பில் இருந்து தயார் செய்ய துவங்கி விடுகின்றனர். இதில் முதல் வகுப்பில் இருந்து படித்து வரும் சில மாணவர்கள் திடீரென சூழ் நிலை காரணமாக கல்வித்தரம் குறைவதால் எஸ்.எஸ். எல்.சி., யில் தேர்ச்சி பெறுவது கடினம் என கருதும் மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பெயிலாக்கி விடுகின்றனர். அதுபோன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள 221 நடுநிலை, 82 உயர்நிலை, மெட்ரிக் பள்ளிகள் கடந்த தேர்வு முடிவில் ஏராளமான மாணவர்களை "பெயில்' ஆக்கியுள்ளனர். பெயிலான மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை அணுகி தங்கள் பிள்ளைக்கு பாஸ் போட்டு தருமாறு மன்றாடி பார்த்தனர்.

                       ஆனால் பள்ளி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. தற்போது ஐகோர்ட் உத்தரவு வந்ததையடுத்து மீண்டும் இப்பிரச்னை உயிரூட்டம் பெற்றுள்ளது. நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் தவறிய மாணவர்களுக்கு பாஸ் போட்டு தருமாறு பெற்றோர் மீண்டும் பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior