உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

கடலூர் கடலோர காவல் படைக்கு அதிவிரைவு படகு

கடலூர் : 

                கடலோர காவல் படைக்கு மத்திய அரசு வழங்கிய அதிவிரைவு படகு கடலூர் வந்தது.

                கடலில் பயங்கரவாதிகள், சந்தேகத்திற்கிடமான நபர்கள் தென்பட்டால் அவர்களை விரட்டிச் சென்று பிடிக்க அதிவிரைவு படகுகளை மத்திய அரசு மத்திய கடலோர காவல் படைக்கு வழங்கி வருகிறது. கடலூர் கடலோர காவல்படை கட்டுப்பாட்டில் விழுப்புரம் மாவட்டம் முட்டுகாடுகுப்பத்தில் இருந்து கடலூர் மாவட்டம் கிள்ளை வரை 68 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளை கண்காணிக்க அதிவிரைவு படகு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழக கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி., லல்லம் சங்கா உத்தரவின் பேரில் ஐ.ஜி., ராஜேஷ் தாஸ் கடலூர் கடலோர பகுதியில் படகை நிறுத்துவதற்கான இடத்தை பார்வையிட்டு அதிவிரைவு படகு வழங்க அனுமதி வழங்கினார்.

                 அதன்படி கோல்கட்டாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரிப்பில் உருவான மணிக்கு 35 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடிய 14 பேர் வரை பயணம் செய்யும் அதி விரைவு ரோந்து படகு கடலூர் கடலோர காவல்படைக்கு வழங்கப்பட்டது. இந்த படகு நேற்று முன்தினம் கடலூர் துறைமுகத்தை வந்தடைந்தது. படகை கோல்கட்டா நிறுவனத்தினர் கடலில் சோதனை ஓட்டம் முடித்து பின் னர் கடலோர காவல்படையிடம் ஒப்படைக்க உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior