பண்ருட்டி வட்டம் காடாம்புலியூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கோழிக் குஞ்சுகள்.
பண்ருட்டி:
பண்ருட்டி பகுதியயில் பழைய பேப்பர், பாட்டில், பிளாஸ்டிக் பொருள்களுக்கு, பணத்துக்கு பதிலாக வண்ணம் பூசிய கோழிக் குஞ்சு தரப்படுகிறது.
பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டைகளை மின்விளக்கு வெப்பத்தின் மூலம் (அடைகாத்து) பொறித்து கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தகைய குஞ்சுகள் சாதாரண கோழிக் குஞ்சுகள் போலின்றி மந்தமான தன்மை கொண்டவை. வண்ணம் பூசிய இக் கோழிக்குஞ்சுகளை பார்த்தவுடன் பெரியவர் முதல் சிரியவர் வரை வாங்க நினைப்பர். இக்கோழிக் குஞ்சுகளை வியாபாரிகள் சைக்கிள் மூலம் ஊர் ஊராக வியாபாரம் செய்வர். பணத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கோழிக் குஞ்சு தற்போது பண்டமாற்று முறையில் பழைய பேப்பர், பாட்டில், பிளாஸ்டிக் பொருள்களுக்கும் அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கோழிக் குஞ்சு வியாபாரிகள் பென்னாகரம் மாதையன், ராஜா ஆகியோர் கூறியது:
கடந்த பல ஆண்டுகளாக இந்த வியாபாரம் செய்து வருகிறோம். நாமக்கல்லில் இருந்து கோழிக் குஞ்சுகளை வாங்கி வந்து தமிழகம் மட்டுமன்றி கேரளம், கார்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் சென்று விற்பனை செய்து வருகிறோம். கோழிக் குஞ்சை ரூ. 2-க்கு வாங்கி அதை ரூ. 5-க்கு விற்கிறோம். ஒரு தடவை ஆயிரம் குஞ்சுகள் எடுத்து வந்தால் 100 குஞ்சுகள் இறந்து விடும். மற்ற குஞ்சுகளை ஒரு வாரத்தில் விற்றுவிடுவோம். தற்போது இக் குஞ்சுகளை யாரும் பணம் கொடுத்து வாங்க முன்வருவதில்லை. இதனால் பழைய பேப்பர், பாட்டில், பிளாஸ்டிக் பொருள்களையும் பெற்றுக்கொண்டு பண்டமாற்று முறையில் கோழிக் குஞ்சுகளை தருகிறோம். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதுடன் கோழிக்குஞ்சு விரைவாக விற்பனை ஆகிறது என்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக