சிதம்பரம் :
சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிதம்பரம் சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால் மக்கள் புழக்கம் அதிகம். அத்துடன் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிதம்பரத்தை கடந்து செல்ல வேண்டும் என்பதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சிதம்பரத்தை கடந்து செல்வதால் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் காணப்படும். வர்த்தக ஸ்தாபனங்கள் அதிகம் உள்ள மேல வீதி, தெற்கு வீதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விஸ்தாரமான சாலையில் பாதசாரிகள் நடந்து செல்ல 2 கோடி ரூபாய் செலவில் நடை பாதை அமைக்கப்பட்டும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நடைபாதை அமைக்கப்பட்டதால் சாலை குறுகியதுடன், எஞ்சிய சாலையில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப் பட்டு பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மேல வீதியில் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவசரத்திற்கு செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட வேகமாக செல்ல முடியாத அளவிற்கு நெரிசல் உள்ளது. எனவே மேல வீதியில் அதிகரித்துவிட்ட வாகன நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக