பண்ருட்டி :
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு துணை முதல்வரால் வழங்கப்பட்ட கடனுதவியை கொடுக்காமல், அலைக்கழித்த கூட்டுறவு சங்க செயலர் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
பண்ருட்டியை அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சியிலுள்ள 11 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, கடந்த மார்ச் 6ம் தேதி காட்டுமன்னார் கோவிலில் நடந்த விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின் 22 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். காசோலையை பணமாக மாற்ற சுய உதவிக்குழுவினர், சித்திரைச்சாவடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்றனர். பலமுறை நடையாய் நடந்தும், பணமாக மாற்ற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டனர். இதுகுறித்து நேற்று முன்தினம் தினமலரில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில், உடனடியாக சுய உதவிக்குழுவினருக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. பணம் பட்டுவாடா செய்யாமல் காலம் தாழ்த்திய, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலர் தனசங்கரை "சஸ்பெண்டு' செய்து, இணை பதிவாளர் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக