விருத்தாசலம் :
ரயில்வே குடியிருப்பு திருமண மண்டப பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் அருகில் ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு விருத்தாசலம் மற் றும் சுற்றியுள்ள ரயில் நிலைய ஊழியர்கள் 500 குடும்பத்தினர் வசிக் கின்றனர். இவர்களின் வசதிக்காக குடியிருப்பு பகுதியிலேயே ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனை, ரேஷன் கடைகள் உள்ளன. அதேபோல் ஊழியர்களின் குடும்ப விசேஷங்களை நடத்துவதற்கு குறைந்த வாடகையில் திருமண மண்டபம் இருந்தது. அதில் போதுமான வசதிகள் இல்லாததால் அந்த மண்டபத்தை இடித்துவிட்டு வசதிகளுடன் கூடிய புதிய மண்டபம் கட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 87 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி கடந்த 2007 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெண்டர் விடப்பட்டது. கட் டட பணி துவங்கியதிலிருந்து ஆமை வேகத்தில் பணிகள் நடக்கிறது. ரயில்வே மண்டபத்தில் குறைந்த வாடகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்த ஊழியர்கள் தற்போது தனியார் மண்டபங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை செலுத்தி விசேஷம் நடத்துகின்றனர். மண்டப கட்டுமான பணியை விரைவு படுத்த ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக