உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

வரிசெலுத்தாத சரக்கு வாகனங்கள் பறிமுதல் : வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை

கடலூர் : 

             கடலூர் மாவட்டத்தில் ஓடிய 650 புதுச்சேரி மாநில பதிவு வாகனங்கள் பிடிக்கப்பட்டு, 19 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

             புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப் பட்ட வாகனங்கள் தமிழகத்தில் ஓட்ட வேண்டுமெனில் வாகன தொகையில் 8 சதவீதம் சாலை வரியாக தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில் சாலை வரிகட்டாமல் புதுச்சேரி மாநில பதிவு பெற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஓடுவதாக கிடைத்த தகவலின் பேரில் வட்டார போக்குவரத்து, மற்றும் போலீசார் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி உட்பட 10 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதில் நேற்று வரை 650 வாகனங்கள் பிடிபட்டன. அதன் மூலம் 19 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. மேலும் கடலூர் மாவட்டத்தில் 2,400 சரக்கு வாகனங்கள் இயங்கி வருகின்றன. அதில் பெரும்பாலானவர்கள் வரி செலுத்தவில்லை. அடுத்த 15 நாட்களுக்குள் வரி செலுத்தவில்லை எனில் வாகனங்கள் பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior