உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பிரசார பயணம் துவக்கம்

சிதம்பரம் : 

           சுற்றுச்சூழலை வலியுறுத்தி இந்தியா முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணம் சிதம்பரத்தில் நேற்று துவங்கியது.

              சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிதம்பரம் போலீஸ் நண்பர்கள் குழுவினர் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணத்தை நேற்று துவக்கினர். போலீஸ் நண்பர்கள் குழு கமாண்டர் மகேந்திரன் தலைமையில் செந்தில்குமார், அன்புச்செல்வன், வினோத்ராஜ், ராஜசெல்வம் ஆகியோரின் பிரசார பயண துவக்க விழா சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்தது. டி.எஸ்.பி,. மூவேந்தன் தலைமை தாங்கினார். நகர மன்றத் தலைவர் பவுஜியாபேகம் முன்னிலை வகித்தார். பிரசார குழுவினர் கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தராஞ்சல், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், அருணாசல பிரதேசம், நாகலாந்து மணிப்பூர், மிசோராம், திரிபுரா, மேகாலயா, ஒரிசா, புதுச்சேரி வழியாக 14 ஆயிரத்து 600 கி.மீ., தூரம் 24 மாநிலங்கள், 86 மாவட்டங்கள் வழியாக 150 நாட்கள் பயணம் மேற்கொண்டு செப். 23ம் தேதி சிதம்பரம் திரும்புகின்றனர்.

பயணத்தை துவக்கி வைத்த விஜிலென்ஸ் (ஆவின்) ஐ.ஜி., பிரதீப் பிலிப் பேசுகையில், 

                 'போலீஸ் நண்பர்கள் குழுவில் ஒவ்வொரு பகுதி இளைஞர்களும் உள்ளதால் குற்றங்களும், மத மோதல்களும் குறைந்தது. ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் போலீசுக்கு உதவும் அமைப்புகள் உள்ளது. அதனை கருத்தில் கொண்டுதான் தமிழகத்தில் துவக்கப்பட்டது. இப்போது நம்மை பின்பற்றி அசாம், திரிபுரா, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் போலீஸ் நண்பர்கள் குழு துவக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior