உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

சிதைந்து போன சி.சாத்தமங்கலம் ஊராட்சி சாலை

சி.சாத்தமங்கலம்:

               சி.சாத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சக்திவிளாகம் கிராமத்திற்கு செல்லும் 2 கி.மீ. சாலை கடந்த ஓராண்டு காலமாக சின்னாபின்னமாகி கிடப்பதால் சக்திவிளாகம் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சக்திவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளியூருக்கு செல்ல வேண்டும் என்றால் சி.சாத் தமங்கலம் வந்து தான் பஸ் ஏற வேண்டும். இல்லையேல் வெள்ளாற்றின் சுடுமணலில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தால் சேத்தியாத்தோப்பிற்கு வரலாம்.

              கிளாங்காடு - சக்திவிளாகம் இடையே மரப்பாலம் அல்லது போக்குவரத்து பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து ஓய்ந்து போய் விட்டனர். என்றாலும் இக்கிராமத்திற்கு செல்ல இருக்கும் ஒரே போக்குவரத்து சாலை சாத்தமங்கலத்திலிருந்து தான் உள்ளது. இச்சாலை வெள்ளம் வரும் போதெல்லாம் வீணாகும். பிறகு சாலை போட திட்டம் உருவாக்கப்படும். அந்த திட்டம் நிறைவேறியதும் மீண் டும் 3 மாதத்தில் சாலை காணாமல் போகும். தற்போது சாலை முற்றிலுமாக சிதைந்து நடந்து சென்றால் கூட பாதசாரிகள் பாதங்களை பதம் பார்க்கும் கருங்கற்கள் சிதறி கிடக் கிறது.

                 ஆனால் அதிகாரிகளோ அச்சாலையை கண்டு கொள்ளவே மறுக்கின்றனர். தற்போதும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு ஓராண்டு முடிந்தும் சாலை போடப்படவில்லை. சாலை போட கொண்டு வந்து கொட்டப்பட்ட ஜல்லிகள் தினமும் போகும் இடம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஜல்லி கொட்டப்பட்டுள்ளதால் இன்று சாலை போடுவார்கள் நாளை தார் போடுவார்கள் என எதிர்பார்த்து மக்கள் ஏமாற்றத்திற்குள்ளானது தான் மிச்சம். சாலை மட்டும் போட்ட பாடில்லை. சக்திவிளாகம் கிராம மக்கள் சாலை சீர்கேட்டை கண்டித்து போராட்டம் நடத்தும் முன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior