உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

நான்கு ஆண்டு பி.எட். படிப்பு: அமைச்சர் க. பொன்முடி


         நான்கு ஆண்டு பி.எட். படிப்பை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து  பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தொடங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ""காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் துணைக் கேள்வி எழுப்பினார். 
 
            "கல்வியைப் பெறுவது அடிப்படை உரிமை' என்ற சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் போது, 8 லட்சம் ஆசிரியர்கள் தேவை என்றும், இதனால் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் எனவும் தெரிகிறது. தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு எத்தகைய முயற்சி எடுத்து வருகிறது'' என்றார்.
 
இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்:
 
             தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளின் எண்ணிக்கை 756 ஆக உள்ளது. இந்தப் பள்ளிகளில் படித்து ஆண்டுதோறும் வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரமாக உள்ளது. அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஆசிரியர் பட்டப் படிப்பு முடித்தவர்கள் அதிகளவு உள்ளனர். நடுநிலைப் பள்ளிகளில் கூட பி.எட். படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கல்வியைப் பெறுவதற்கான உரிமை என்ற சட்டம் அமலாகும் போது, தமிழகத்தில் தேவையான அளவுக்கு அதிகமாகவே ஆசிரியர்கள் இருப்பார்கள் என்றார்.அப்போது, குறுக்கிட்ட உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, ""இப்போது பட்டப்படிப்பு முடித்ததும் ஓராண்டு பி.எட். படிப்பு நடைமுறையில் உள்ளது. இதனுடன், பிளஸ் டூ படிப்புக்குப் பிறகு நான்கு ஆண்டு பி.எட். படிப்பை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior