சிதம்பரம்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச பாட நூல்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் பள்ளிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் அனைவருக்கும் வழங்கப்படும் என கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி அறிவித்தார்.
இதனடிப்படையில் பள்ளி தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் சிதம்பரம் அரசு மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணாவித்யாசாலை மேல்நிலைப் பள்ளி, ஆறுமுகநாவலர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர்கல்வி பாடத்திட்டம் என்பதால் அவர்களுக்கு புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் திறக்கப்படும் முன் கோடை விடுமுறையிலேயே புத்தகங்கள் வழங்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் அவற்றை வாங்கிச் சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக