பண்ருட்டி :
பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் அதிக வழக்குகள் பதிவாவதால் இரண்டு போலீஸ் ஸ்டேஷன்களாக பிரிக்க போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷன் கடந்த 1924ல் திருவதிகையில் துவங்கப்பட்டு பின் பண்ருட்டியில் கடந்த 1949ல் துவங்கப்பட்டது. பண்ருட்டி நகரம் மற்றும் கிராமப்புறங்கள் என இங்கு இரண்டு லட்சம் பேர் வசிக்கின்றனர். ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் 49 பணியிடத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 3 சப் இன்ஸ்பெக்டர்கள், 4 தேர்வு சப் இன்ஸ் பெக்டர்கள், 41 போலீசார் உள்ளனர். இதில் டி.எஸ்.பி.அலுவலகம், கடலூர் சி.ஆர்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் டிரைவர்கள், கிளார்க், மற்ற பணிகளுக்கு 20 பேர் சென்று விடுகின்றனர். மீதமுள்ள 21 போலீசாரில், 4 பேர் ஹைவே பேட் ரோல், விளையாட்டு, கோர்ட், சம்மன், மருத்துவச் சான்று பெறுவதற்கு ஒருவர், பாரா, மைக் உள்ளிட்ட பணிகளுக்கு சென்று விடுவதால் போலீசார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தினமும் 7 முதல் 12 வழக்குகள் வரை பதிவாகிறது. தொடர் வழக்கால் ஓய்வில்லாமல் பணி செய்வதாக சொற்ப அளவிலான போலீசார் புலம்புகின்றனர். இதனால் பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனை தாலுகா நகர போலீஸ் ஸ்டேஷன் என இரண்டாக பிரிக்க வேண்டும். இதற்கு போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக