உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

நிறைவு பெறாத திட்டப் பணிகள்: குடிநீருக்கு அல்லாடும் சிறுபாக்கம் ஊராட்சி

சிறுபாக்கம்:

                சிறுபாக்கம் ஊராட்சியில் இரண்டு ஆண்டுகளாக குடிநீர் திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி அல்லாடி வருகின்றனர்.

                 மங்களூர் ஒன்றியம் சிறுபாக்கம் ஊராட்சியில் சிறுபாக்கம், எஸ். மேட்டூர், நத்தகாடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கியுள்ளன. முதல் நிலை ஊராட்சியான இங்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி, இரு தொடக்க பள்ளிகள், மூன்று தனியார் நர்சரி பள்ளிகள், இரண்டு அரசு மாணவர் விடுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூட்டுறவு வங்கி, ஸ்டேட் பாங்க், தொலைபேசி, மின்வாரியம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

                 சிறுபாக்கம் குறு வட்ட தலைமையிடமாகவும் விளங்கி வருவதால் அருகில் உள்ள சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த எஸ். புதூர், அரசங்குடி, மாங் குளம், ஒரங்கூர், வடபாதி, எஸ்.நரையூர் உள் ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட அலுவல்களுக்கு சிறுபாக் கம் வந்து செல்கின்றனர். இவ்ஊராட்சியில் நான்கு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வந் தது. ஊராட்சியில் 15க்கும் மேற்பட்ட குடிநீர் கைப் பம்புகளும் அமைக்கப்பட் டன. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுபாக்கம் ஊராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க மங்களூர் ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரின் கிழக்கு புறம் எஸ்.மேட்டூர் அருகில் கிணறு தோண்டி பைப் லைன் மூலம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றி குடிநீர் வழங்க முடிவு செய்யப் பட்டது.

                அதன்படி 2008ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட இத்திட்டப் பணிகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. நீர் ஏற்றும் மின் மோட்டார் கொட்டகை பாதி அளவிலும், ஒரு மீட்டர் அளவு மட்டும் தரை கிணறு தோண்டப்பட்டும் பாதியிலேயே பணி முழுமையடையாமல் உள்ளது. கிணற்றில் இருந்து குடிநீர் தொட்டிக்கு பதிக்கப்படவேண்டிய பி.வி.சி.,பைப்புகள் ஊராட்சி அலுவலக வளாகத்திலேயே கேட்பாரின்றி கிடக்கிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் குடிநீருக்காக மக்கள் அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் மெத்தன போக்கால் மக்களுக்கு பயன்படக் கூடிய பல நல்ல திட்டங்களும் பாழடைந்து வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior