உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

எம்.பி.பி.எஸ்., பி.இ.: விண்ணப்பிக்க இன்றே கடைசி



             எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய விண்ணப்பத்தை அளிக்க திங்கள்கிழமை (மே 31) கடைசி நாளாகும்.  எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் விண்ணப்பம், திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக்குழுச் செயலர் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும். பி.இ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் விண்ணப்பம், திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும்.  அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 1.15 லட்சம் பி.இ. விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. கூடுதல் சிறப்பு கவுன்டர்கள்: பூர்த்தி செய்த பி.இ. விண்ணப்பத்தைப் பெற சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்போது 16 சிறப்பு கவுன்டர்கள் செயல்பட்டு வருகின்றன. கடைசி நாளான திங்கள்கிழமை ஏராளமான மாணவர்கள் விண்ணப்பத்தை அளிக்க வசதியாக, மேலும் 4 கூடுதல் சிறப்புக் கவுன்டர்கள் திறக்கப்படும்.  பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜூன் 15-ம் தேதி சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படும்; ஜூன் 18-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் 28-ம் தேதி கவுன்சலிங் தொடங்கும் என்று துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர் கூறினார்.

Read more »

இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி


பந்தை பவுண்டரிக்கு விளாசுகிறார் விராட் கோலி. பந்தை சிக்ஸருக்கு விளாசும் ஆட்ட நாயகன் ரோஹித் சர்மா.
 
 
புலவாயோ (ஜிம்பாப்வே):
 
                ரோஹித் சர்மா, விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. 
 
                  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் 242 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆடிய இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா சேர்க்கப்பட்டார்.
 
              டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து இலங்கை அணியின் கேப்டன் தில்ஷனும், உபுல் தரங்காவும் ஆட்டத்தைத் துவக்கினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு களமிறங்கிய உபுல் தரங்கா, 1 ரன்னில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து தில்ஷனுடன் சமரவீரா ஜோடி சேர்ந்தார். தில்ஷன் கேப்டன் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சமரவீரா 19 ரன்களில் இருந்தபோது தினேஷ் கார்த்திக்கால் ஸ்டம்ப்டு முறையில் அவுட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து துணை கேப்டன் ஏஞ்செலோ மேத்யூஸ், தில்ஷனுடன் இணைந்தார். அணியின் ஸ்கோர் 97 ரன்களை எட்டியபோது சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த தில்ஷன் எதிர்பாராதவிதமாக ரன்அவுட் ஆனார். 
 
               அவர் 84 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார்.  இதையடுத்து மேத்யூஸýடன், கபுகேதரா ஜோடி சேர்ந்தார். கபுகேதரா மிகவும் நிதானமாக விளையாட, மறுமுனையில் இருந்த மேத்யூஸ் ஓரளவு சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 48 பந்துகளைச் சந்தித்த கபுகேதரா, 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த சில்வா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பெரேரா மேத்யூஸடன் ஜோடி சேர்ந்தார். பெரேரா அதிரடியாக விளையாடியதால் மந்தமாக இருந்த இலங்கை அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது. அவர் 23 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 226 ரன்களை எட்டியபோது சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த மேத்யூஸ், யாதவ் பந்தில் கிளீன் போல்டு ஆனார். இறுதியில் 49.5 ஓவர்களில் இலங்கை அணி 242 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.இந்திய வீரர்கள் திண்டா, ஜடேஜா, ஓஜா ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோர் ஆட்டத்தைத் துவக்கினர். கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடாத இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. 
 
                இருப்பினும் விஜய் 14 ரன்களுக்கும், கார்த்திக் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர் .இதைத்தொடர்ந்து விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். கடந்த ஆட்டத்தில் ரன்அவுட் ஆன கோலி, இந்த ஆட்டத்தில் மிகவும் கவனமாக விளையாடினார். இந்த ஜோடி விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டதோடு, பந்துகளையும் வீணடிக்காமல் அருமையாக விளையாடியது. இருவரும் அடுத்தடுத்து அரை சதமடித்தனர்.37.4-வது ஓவரில் அணியின் ஸ்கோர் 201 ரன்களை எட்டியபோது,82 ரன்களில் விளையாடிக்கொண்டிருந்த கோலி, ரனதேவ் பந்தில், பெர்ணான்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 92 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். 
 
                   இதையடுத்து கேப்டன் ரெய்னா களமிறங்கினார். 43-வது ஓவரின் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து, ஒருநாள் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை ரோஹித் சர்மா நிறைவு செய்தார். கடந்த ஆட்டத்திலும் ரெய்னா சதமடித்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் 43.3 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 100 பந்துகளில் 2 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 101 ரன்களுடனும், ரெய்னா 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிறப்பாக விளையாடி சதமடித்த ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 
சுருக்கமான ஸ்கோர்:  
 
              இலங்கை- 242 (மேத்யூஸ் 75, ஓஜா 2வி/44), இந்தியா- 243/3 (ரோஹித் 101*, விராட் கோலி 82). ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் தோற்றதால் விமர்சனங்களுக்குள்ளான இந்திய அணி, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வென்றதன் மூலம் அதிலிருந்து மீண்டுள்ளது. ரெய்னா தலைமையிலான இந்திய அணியின் வெற்றி தொடருமா? என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு.

Read more »

ஏடிஎம்மில் இனி ஒரேநாளில் ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்


            வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் எந்திரங்கள் மூலமாக இனி ஒரேநாளில் ரூ 1 லட்சம் வரை எடுக்கலாம். அதேபோல் தங்களது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ 1.25 லட்சம் வரை ஒரேநாளில் ஷாப்பிங் செய்யலாம் .இந்தத் திட்டம் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. இதர வங்கிகளும் இத்திட்டத்தை விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவரும் எனத் தெரிகிறது. தற்போது ஏடிஎம் மூலமாக ஒருநாளைக்கு ரூ 50,000 வரை மட்டுமே எடுக்க முடியும். இந்த புதிய அறிவிப்பின் மூலம் கூடுதலாக பணம் எடுப்பதற்காக வங்கி வாடிக்கையாளர்கள் இனி வங்கிகளுக்கு நேரடியாக அலைவதைத் தவிர்க்க முடியும்.

Read more »

காமராஜர் பல்கலை. தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு

மதுரை

                மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்கக மாணவர்களுக்கான திறந்தவெளி தொடக்கநிலை மற்றும் அடிப்படை நிலை, சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான ஏப்ரல் 2010-ம் ஆண்டுக்கான அல்பருவத் தேர்வுகள் ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ளன.  

      இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்:  அபராதமின்றி - 1.6.2010, ரூ.100 அபராதத் தொகையுடன்- 10.6.2010. 

                      சான்றிதழ், பட்டயம், முதுநிலைப் பட்டயம், திறந்தவெளி- தொடக்கநிலை மற்றும் அடிப்படை நிலை படிப்புகள் ஆகியவற்றுக்கான தேர்வுகள் ஜூலை 7-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி வரை (ஓவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்) நடைபெறும்.  தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தால் அனுப்பப்பட்டு வருகின்றன.        

              தனித்தேர்வர்கள் தேர்வு விண்ணப்பங்களைக் கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.  அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் ரூ.15-க்கான அஞ்சல் தலை ஒட்டிய சுய முகவரியிட்ட உறையை இணைத்துக் கூடுதல் தேர்வாணையர் முகவரிக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.  இத் தகவல்களை பல்கலைக்கழக கூடுதல் தேர்வாணையர் (பொறுப்பு) கு.சேதுராமன் தெரிவித்தார்.

Read more »

கடலூரில் காய்கறிகள் விலை கடும் உயர்வு


கடலூர்
 
             கடலூரில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது.கோடை காலத்தில் தக்காளி விலை பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். 
 
                ஆனால் 20 தினங்களுக்கு முன் கிலோ ரூ. 8 ஆக இருந்த தக்காளி விலை, தற்போது ரூ. 28 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக அங்கிருந்து தக்காளி வரத்து குறைந்திருப்பதே விலை ஏற்றத்துக்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.15 தினங்களுக்கு முன் கிலோ ரூ. 20 ஆக இருந்த கேரட் ஞாயிற்றுக்கிழமை ரூ. 36 ஆக உயர்ந்து விட்டது. கிலோ ரூ. 10 ஆக இருந்த கோஸ் ரூ. 14 ஆகவும், ரூ. 12 ஆக இருந்த சின்ன வெங்காயம் ரூ. 16 ஆகவும், ரூ. 16 ஆக இருந்த பீட்ரூட் ரூ. 24 ஆகவும், ரூ. 20 ஆக இருந்த பீன்ஸ் ரூ. 44 ஆகவும், ரூ. 6 ஆக இருந்த கத்தரிக்காய் ரூ. 16 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.பொதுவாக ரூ. 50-க்கு மேல் காய்கறி வாங்கினால் சில கடைகளில் சிறிய கத்தை கொத்தமல்லி, கறிவேப்பிலை இலவசமாக வழங்குவார்கள். ரூ. 2-க்கு சிறிய கத்தை கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை விற்பனை செய்யப்பட்டு வந்தது. 
 
               ஆனால் கடந்த 15 தினங்களாக கொத்தமல்லி கறிவேப்பிலையை சந்தைகளில் பார்ப்பதே அரிதாகி விட்டது.ரூ. 5-க்கு குறைவாக, கொத்தமல்லி, கறிவேப்பிலை விற்பதில்லை. அதுவும் வாடி வதங்கிய நிலை. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து கொத்தமல்லி வரத்து முற்றிலும் நின்றுபோய் விட்டதே விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதிக வெப்பம் காரணமாக மரங்களில் கறிவேப்பிலை இலைகள் கருகத் தொடங்கி இருக்கின்றன.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு, காய்கறி விளைச்சல் குறைவாக இருப்பதே விலை உயர்வுக்குக் காரணம் என்று  கடலூர் காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். 
 
                 மேலும் கோடை வெயில் சுட்டெரிப்பதால் காய்கறிச் செடிகளில் காய்கள் குறைந்து, வாடத் தொடங்குவதாகவும் கூறுகிறார்கள்.கடந்த 45 நாள்களாக மீன்கள் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் மீன்கள் விலை சாதாரண மீன்கள் கிலோ ரூ. 100-ல் இருந்து ரூ. 180 ஆகவும், விலை உயர்ந்த மீன்கள் ரூ. 250-ல் இருந்து ரூ. 500 ஆகவும் உயர்ந்து விட்டது. மீன்பிடித் தடை நீங்கி கடலுக்குள் சென்ற மீனவர்களோ, உள்ளூர் மக்கள் விரும்பிச் சாப்பிடும் மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை எனக் கைவிரிக்கிறார்கள்.கடந்த ஆண்டு கிலோ ரூ. 240 ஆக விற்பனை செய்யப்பட்ட ஆட்டிறைச்சி  தற்போது, ரூ. 280 ஆக உயர்ந்து விட்டது. 
 
                      ஏழை எளிய மக்கள் வாங்கிச் சாப்பிடும் நிலையில் இல்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மளிகைச் சாமான்கள் விலை, இந்த ஆண்டு 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது.சாதாரணமாக கிலோ ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படும் பூண்டு, தற்போது ரூ. 80 ஆக உயர்ந்து இருக்கிறது. கிலோ ரூ. 45 ஆக இருந்த மிளகாய் வற்றல் ரூ. 55 ஆகவும், ரூ. 40 ஆக இருந்த உளுந்து ரூ. 75 ஆகவும் உயர்ந்து இருக்கிறது. மணிலா, பாமாயில் எண்ணெய் விலை ரூ. 20 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

Read more »

Silver Beach overflowing with visitors

 
Respite from heat: A scene at the beach in Cuddalore on Sunday.



CUDDALORE: 

            A large number of people thronged the Silver Beach here seeking respite from the intense heat on Sunday.

          The number of holiday-makers swelled as it happened to be the last Sunday of the summer vacation. The persons in-charge of the parking lot at the beach reported a steady stream of vehicles coming in right from the morning. Camel ride was a major attraction to children. Vendors, particularly those selling ice cream, reported brisk business. Several children could be seen taking repeated dips in the sea. Police personnel had a tough time controlling people from getting deep into the sea.

Read more »

"இக்னோ" தேர்வுகள் நாளை துவக்கம்


              இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில்(இக்னோ) பருவத்தேர்வு நாளை துவங்குகிறது. 

பல்கலை மண்டல இயக்குனர் சண்முகம் அறிக்கை:

                   ல்வேறு நாடுகளில் 753 மையங்கள், சிறைகளில் 21 மையங்கள் மற்றும் 51 இக்னோ கூட்டமைப்பு மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பித்த மூன்று லட்சத்து 48 ஆயிரத்து 36 பேருக்கு அனுமதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விவரங்களை இக்னோ இணையதளத்தில் பெறலாம்.

          தென் மண்டலத்தில் மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, ஈரோடு உட்பட பத்து மையங்களில், பத்தாயிரம் பேர் தேர்வு எழுதவுள்ளனர். அனுமதி படிவம் கிடைக்காதவர்கள் இணையதளத்தில் இருந்து அச்சு எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு செல்வோர் மண்டல மையத்தின் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

             தேர்வு அனுமதி படிவத்தில் ஏதேனும் குறிப்பு இருப்பின் "இக்னோ' மண்டல மையத்தை அணுகலாம். பி.சி.ஏ., - எம்.சி.ஏ., மாணவர்களின் செய்முறை தேர்வுக்கு அனுமதி படிவம் மண்டல மையத்தில் இருந்து ஜூன் கடைசி வாரத்தில் அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு இக்னோ மண்டல மையத்தை நேரில் அல்லது போனில் (0452 -238 0387, 238 0733, 237 0733) தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூரில் 106 டிகிரி வெயில்

கடலூர் :
 
          மிழகத்தில் அதிகபட்சமாக கடலூரில் ஞாயிற்றுக்கிழமை 106 டிகிரி வெயில் பதிவானது.6 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
 
மற்ற இடங்களில் பதிவான வெயில் அளவு (பாரன்ஹீட்டில்):
 
வேலூர் 103
திருச்சி 103
கோவை 102
சென்னை 102
மதுரை 101

 

Read more »

கடலூர் மாவட்டத்தில் முறைகேடாகப் பயன்படுத்திய 82 சமையல் கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் முறைகேடாகப் பயன்படுத்தியதாக, கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 82 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். சமையல் கேûஸ தவறாக வணிக நோக்கில் பயன்படுத்துவோர் பற்றி தகவல் தெரிந்தால், தொலைபேசி எண் 04142- 230223 மற்றும் செல்ஃபோன் எண் 9445000209 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

Read more »

கல்வியியல்மாணவர்களுக்கு தேர்வு

விருத்தாசலம்:

                  விருத்தாசலம் அரசு கல்லூரியில், கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு அரசுத் தேர்வு வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில், கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு மே 27-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வு ஜூன் 9-ம் தேதி தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வில் விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் உள்ள 17 கல்லூரிகளைச் சேர்ந்த 1700 மாணவர்கள் பி.எட் தேர்வும், 98 மாணவர்கள் எம்.எட். தேர்வும் எழுதுகின்றனர். தேர்வுகளை பேராசிரியர்கள் பக்கிரிசாமி, மனோகரன், சுப்பிரமணியன், கதிர்வேல் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

Read more »

சிதம்பரத்தில் மின் மயானம் அமைக்க முடிவு

சிதம்பரம்:

               சிதம்பரத்தில் அனைத்து அரிமா சங்கங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், அனைத்து சங்கங்களும் இணைந்து சிதம்பரம் நகரில் மின் மயானம் அமைப்பது, அனைத்து சாலைகளில் இருபுறமும் மரக்கன்றுகள் நடுவது, பள்ளிகளில் சேவை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

                     ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.அஷ்ரப்அலி வரவேற்றார். முன்னாள் தலைவர் எஸ்.ஏ.லத்தீப்கான் தலைமை வகித்தார். பொருளாளர் கே.கணபதி முன்னிலை வகித்தார். அரிமா சங்க மாவட்ட கவர்னர் ரத்தினசபாபதி சிறப்புரையாற்றினார். முன்னாள் கவர்னர்கள் ஆர்.எம்.சுவேதகுமார், ஆர்.கேதார்நாதன், டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன், டாக்டர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் பேசினர். கோவில்நகர அரிமா சங்கம், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம், சுப்ரீம் அரிமா சங்கம், கோவில் நகர ரோட்டரி சங்கம், அண்ணாமலைநகர் அரிமா சங்கம், சிதம்பரம் நகர ரோட்டரி மற்றும் அரிமா சங்கம் உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Read more »

என்எல்சி தொமுச இன்று ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்குகிறது

நெய்வேலி:

               ஊதியமாற்று ஒப்பந்தத்தில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி என்எல்சி நிர்வாகத்திடம் திங்கள்கிழமை ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கவிருப்பதாக தொமுச அலுவலகச் செயலர் எ.காத்தவராயன் தெரிவித்தார். 

                என்எல்சி தொழிலாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாமக கடந்த 3 மாதங்களாக நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி வருகிறது. இதில் பெரும்பாலான கொள்கை முடிவுகள் பேசிமுடிக்கப்பட்டுள்ள நிலையில் அலவன்ஸ் நிலுவைத் தொகை பெறுவதில் முட்டுக்கட்டை நிலவியது. இதையடுத்து தொமுச நிர்வாகிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தொமுச பேரவை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்தனர். இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற தொழிலாளர்களை ஒன்றிணைத்து போராட்ட நடவடிக்கையில் இறங்க முடிவு செய்திருப்பதாகவும், இதில் முதற்கட்டமாக திங்கள்கிழமை, நிர்வாகத்திடம் வேலைநிறுத்த அறிவிப்புக் கடிதம் வழங்கப்படும் என்று  எ.காத்தவராயன் தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள மற்றொரு சங்கமான பாமக தொழிற்சங்கம் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

Read more »

Domestic LPG cylinders seized from eateries


CUDDALORE:

                 As many as 82 LPG cylinders meant for domestic use were seized from commercial establishments in the last few days, according to P. Seetharaman, Collector.

              In a statement released here, he said that to streamline the LPG refill supply and prevent any possible misuse of refills, it had been proposed to hold grievance day sessions for LPG consumers on the third or fourth Saturday of every month. The grievances would be heard by either the District Revenue Officer or the District Supply Officer. Besides, delay in refill delivery, diversion of domestic cylinders for other purposes could also be reported to the officials. They, in turn, would take it up with the agents concerned or officials of the petroleum companies such as the Indian Oil Corporation, the Bharat Petroleum and the Hindustan Petroleum as the case may be. 

The consumers could also register their complaints by calling 04142—230223 or 9445000209.

Read more »

Compensation for fishermen sought

CUDDALORE:

             The Viduthalai Vengaigal, a fishermen's outfit, has urged the Union and State governments to sanction a compensation of Rs. 5 lakh each to the families of over 500 Tamil Nadu fishermen who were killed by the Sri Lankan Navy and also government jobs for their wards. A resolution was adopted at the birth anniversary celebration of Singaravelar, a social reformist, here recently. It said that the fishermen, risking their lives, were helping the government earn a foreign exchange of Rs. 10,000 crore a year. Therefore, it would be only appropriate that a compensation of Rs. 5 lakh is given to the families of the fishermen who perish on the high seas.

Read more »

விருத்தாசலத்தில் உயர் கல்விகுறித்த ஆலோசனை முகாம்

விருத்தாசலம்: 

                     பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி குறித்த ஆலோசனை முகாம் விருத்தாசலத்தில் நடந்தது. விருத்தாசலம் விருத்தாம்பிகை கல்வி நிறுவனம் மற்றும் சமூக நல சங்கம் சார்பில் நடந்த இந்த முகாமிற்கு சமூக நல சங்க தலைவர் சுப்ரமணியம் தலைமை தாங்கினார். பொறியாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். தாளாளர் சுந்தரவடிவேல் வரவேற்றார்.முகாமில் ஆலோசகர்கள் ஜீவலதா, விருத்தகிரி, டாக்டர் வள்ளுவன், ரங்கராஜன், விஜயகுமார், வீராசாமி உள்ளிட்டோர் பிளஸ் 2 விற்கு பின் என்ன படிப்பது, எங்கு படிப்பது குறித்த ஆலோசனை வழங்கினர். முகாமில் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

Read more »

சமச்சீர் கல்வி பாட புத்தகம் நாளை முதல் வினியோகம்

கடலூர்:

                  கடலூர் மாவட்டத்தில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் 63 ஆயிரத்து 43 மாணவ,மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்கள் நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்படுகிறதது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மாநில பாடத் திட்டமும், தனியார் பள்ளிகளில் மெட்ரிக் பாட திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருவதால் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனை போக்கிட அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி பாட திட்டத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
              இதன் முதல் கட்டமாக நடப்பு கல்வி ஆண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அச்சிட்டு அனைத்து மாவட் டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.கடலூர் மாவட்டத்தில் உள்ள 25 ஆயிரத்து 863 முதல் வகுப்பு மாணவர்கள் மற்றும் 37 ஆயிரத்து 180 ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்தது. இதனை அந்தந்த பள்ளிகளுக்கு நேற்று முதல் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை (1ம்தேதி) முதல் சமச்சீர் கல்வி பாட திட்ட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

Read more »

ரயில்வே சுரங்கப்பாதை பணி: இளைஞர் காங். வலியுறுத்தல்

கடலூர்: 

                     கல்வி கட்டண குறைப்பை அனைத்து பள் ளகளிலும் அமல்படுத்திட இளைஞர் காங்.,கோரிக்கை விடுத்துள்ளது. கடலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கடலூர் காங்., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத் திற்கு கடலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்., தலைவர் வனிதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ், சட்டசபை தொகுதி செயலாளர் குறிஞ்சிப்பாடி அழகிரி, விருத்தாசலம் இளையராஜா, திட்டக்குடி சவுந்தர், கடலூர் ராமராஜ், பண்ருட்டி லிஸ்ஸி ஜோஸ்பர் சபரிநாதன்,நெய்வேலி கலியபெருமாள் மற்றும் லோக்சபா தொகுதி பொது செயலளர்கள் தமிழ்செல்வன், ராமநாதன், வேல்முருகன் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்டத்தில் வெள்ள கால தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசிடமிருந்து 300 கேடி ரூபாய் பெற்று தந்த எம்.பி., அழகிரிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கட்டணம் குறைப்பை அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தவும், இதனை கண்காணிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
            தொழிலாளர் பிரச் னைக்கு என்.எல்.சி., நிர் வாகம் உடன் தீர்வு காண வேண்டும். என்.எல். சி.,க்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு நிர் வாகம் நிரந்தர வேலை கொடுக்க வேண்டும். கடலூரில் ராஜிவ் காந்தி சிலை வைக்க நகர நிர்வாகம் ஆவன செய்ய வேண் டும். கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை பணியை உடன் துவங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டக்குடியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். வெலிங்டன் ஏரிக்கரை பலப்படுத்தும் பணியை பருவ மழை தொடங்கும் முன் விரைந்து முடிக்க வேண் டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read more »

குடிநீரில் கழிவு நீர் கலக்காமல் தடுக்கஊராட்சி தலைவர்களுக்கு அறிவுரை

கடலூர்: 

              குடிநீரில் கழிவு நீர் கலந்து நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 மாவட்டத்தில் கழிவு நீர் கலந்து காலரா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் கீழ் கண்டவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

               மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டியது ஊராட்சியின் கட்டாயமாகும். அனைத்து கிராம ஊராட்சிகளால் பராமரிக்கப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகளையும் இரு நாட்களுக்குள் சுத்தம் செய்ய வேண்டும். குளோரினேஷன் செய்யப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக இலவசமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குடிநீரில் பாக்டீரியாக்கள் பரிசோதனை செய்ய வேண்டியிருந்தால், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் கண்ணாடி குடுவைகளில் குடிநீர் மாதிரிகள் சேகரம் செய்து ஒப்படைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் குழாய்களில் கழிவு நீர் கலக்காமல் இருக்க குடிநீர் குழாய்களில் உடைப்புகள், ஓட்டைகள் மற்றும் கசிவுகள் காணப்பட்டால், அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். குடிநீர் பிடிக்கும் இடங்களில் திருகு குழாய் இல்லாமல் இருந்தால் உடனடியாக திருகு குழாய் பொருத்தவும், பள்ளம் தோண்டி தண்ணீர் பிடிக்கும் இடங்கள் இருந்தால் பள்ளத் தினை மூடி, சுகாதார முறைப்படி அமைக்க வேண்டும். இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் தீவிரமாக முடிக்க அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை சம்மந்தப் பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கி.ஊ) மூலமாக அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் பற்றாளர்கள் நியமனம் செய்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.


Read more »

அனுமதி இல்லாத மனைகளை வாங்காதீர் பண்ருட்டி நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

பண்ருட்டி: 

           பண்ருட்டி நகர பகுதியின் நகராட்சி அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து பண்ருட்டி நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்தி குறிப்பு :-

                              பண்ருட்டி நகர பகுதியில் விற்கப்படும் அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளில் மனைகளை எவரும் வாங்க வேண்டாம். இந்த மனை பிரிவுகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு மற்றும் மழை நீர் வடிகால் வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தி தரப்படமாட்டாது. மேலும், அனுமதி பெறாத மனைகளை வாங்கினால் அதில் வீடு கட்ட நகராட்சி நிர்வாகத்தால் கட்டட அனுமதியும் வழங்கப்படமாட்டாது. இந்த அறிவிப்பையும் மீறி, அனுமதி பெறாத மனைகளை வாங்கி வீடு கட்டினால் அதனை நகராட்சி நிர்வாகத்தால் தடை செய்வதோடு, கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். எனவே பொதுமக்கள் மனைகள் வாங்கும் போது அவை அனுமதி பெற்றவையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

"டிவி'க்கு அடிமைப்பட்டு கிடக்கின்றனர் மக்கள் : டி.ஐ.ஜி., மாசானமுத்துவேதனை

கடலூர்: 

                குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமைய, பெற்றோர்கள் தியாகம் செய்ய வேண்டும் என டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசினார். வர் சென்சாய் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரெட் கிராஸ் கவுரவ செயலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். 

கராத்தே மாணவர்களுக்கு "பிளாக் பெல்ட்' மற்றும் சான்றிதழ் வழங்கி டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசியதாவது:

                   தமிழ் மண் வீரத்திற்கு பெயர் பெற்றது. தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்கள், பல்லவர்கள் வீரத்தின் விளை நிலமாக பயன்படுத்திய இந்த மண்ணின் மைந்தர்களாகிய நீங்கள் வீரத்திற்கு சோடைபோக மாட்டீர்கள். வீரம் வளர்ந்து சாதனைகளாக மாறவேண்டும்.உள்ளத்தோடு அறிவும் வளர வேண்டும் என்று சான்றோர்கள் சொல்வார்கள். அறிவு வளர கராத்தே பயன்படுகிறது. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கிறது. அந்த திறமையை வளர்க்க ஒரு களம் தேவை. அந்த களமாக கராத்தே பள்ளி அமைந்துள்ளது.

             பெரும்பாலான மக்கள் "டிவி'க்கு அடிமைப்பட்டு கிடக்கின்றனர். ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்காக தியாகம் செய் தால் தான் அவர்களின் எதிர்காலம் நன்றாக அமையும். பெண்கள் பயிற்சி பெற்றால் அவர்களுக்கு தற்காப்பிற்கு உதவியாக இருக்கும்.உலகத்தில் எதை வேண்டுமானாலும் பெறலாம். இழந்த உயிரை பெறமுடியாது. விலை மதிப்பற்றது உயிர். கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. போக்குவரத்தை சரி செய்ய போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தில் தினமும் 20 முதல் 30 பேர் வரை விபத்தில் இறக்கின்றனர். 100க்கும் மேற்பட் டோர் காயமடைகின்றனர். விபத்தால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய முடியாது. போக்குவரத்து விதிகளை மதித்து நடந்தால் விபத்துக்களை தடுக்கலாம். இவ்வாறு டி.ஐ.ஜி., பேசினார்.விழாவில், டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, கணபதி, கண்ணன், லட்சுமி சோரடியா பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா, ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி முதல்வர் ராஜயோககுமார், சென்சாய் செல்லபாண்டியன், லில்லி சமாதானம் பங்கேற்றனர். மனோகரன் நன்றி கூறினார்.

Read more »

விருத்தாசலம் அருகே சூறாவளி காற்றுடன் கனமழை : மின்னல் தாக்கி மாணவி பலி

விருத்தாசலம் : 

                விருத்தாசலம் அருகே நேற்று மாலை திடீரென சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன; மின்னல் தாக்கியதில் மாணவி இறந்தார்; மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததில் கிராமமே இருளில் மூழ்கியது.

             கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் காய்ந்தது; அனல் காற்றினால் மக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது; சற்று நேரத்தில் மழை பெய்ய துவங்கியது. மாலை 5 மணி அளவில் விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக் காற்றில் குடிசை வீடுகளின் கூரைகளும், ஓட்டு வீடுகளில் இருந்த ஓடுகளும் பறந்தன.

             சூறைக் காற்றினால் 200க்கும் மேற்பட்ட மரங்களும், 25க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் முறிந்து விழுந்ததில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பலத்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கிராம மக்களை அச்சுறுத்திய சூறைக் காற்றும், பலத்த மழையும் மாலை 6 மணிக்கு ஓய்ந்தது. மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் கிராமமே இருளில் மூழ்கியது.

மாணவி பலி: 

                  விருத்தாசலத்தை அடுத்த தொரவளூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெரிய காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் ரம்யா (18) மீது மின்னல் தாக்கியது. அதில், அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Read more »

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் கிடுகிடு உயர்வு

Top world news stories and headlines detail

கடலூர் : 

                  கல்விக்கட்டணத்தை அரசே நிர்ணயித்த போதிலும் தனியார் பள்ளிகள் கூடுதலாக வசூலித்து வருகின்றனர். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

                               பிரி கேஜில் "மம்மி, டாடி' என துவங்கி நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பு இருப்பதாக கருதுகிறோம். இதன் விளைவாக பெற்றோர்கள் ஆங்கில மொழியில் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை நாடிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. தமது குழந்தைகள் படித்து பெரிய அளவில் வரவேண்டும் என்கிற பெற்றோர்களின் கனவால் தான் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் "மவுசு' கூடி வருகிறது.சாதாரண விவசாய கூலித்தொழிலாளி கூட துவக்க காலத்தில் எல்.கே.ஜி., க்கு 8 ஆயிரம் ரூபாய் செலுத்த கவலைப்படுவதில்லை. ஆறாம் வகுப்பை அடையும்போதுதான் விவசாயக்கூலி, நடுத்தர குடும்பத்திற்கு கல்வி கட்டணம் கசக்கி பிழிகிறது. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் பெற்றோர்களிடம் தாறுமாறாக வசூலிப்பதாக நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் கட்டுப்படுத்தப்படும் எனவும், பள்ளிக்கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்யும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

                    அதன்படி அரசு, சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணயிப்புக்குழு ஒன்றை முதல்வர் அமைத்து பரிசீலனை செய்தார். இந்த குழு தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியவற்றை கணக்கிட்டு பள்ளி மாணவர்களுக்காக பெற்றோர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 398 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய உத்தரவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் மூலம் அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை புறந்தள்ளிவிட்டு பள்ளி நிர்வாகம்தம் இஷ்டம்போல் கட்டணத்தை தொடர்ந்து வசூலித்து வருகிறது. மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூட அரசு நிர்ணயித்த கட்டணத்தை கடைபிடித்ததா என்றால் இல்லை.

                       அரசு நிர்ணயித்த கட் டண உத்தரவை மாவட்ட முதன் மைக்கல்வி அதிகாரி பள்ளி நிர்வாகிகளுக்கு கொடுத்து முடிக்கவேபோதும்போதும் என்றாகிவிட்டது. மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகின்றன. அண்மையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதைத் தொடர்ந்து பிளஸ் 1 சேர்க்கையில் பள்ளிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் புத்தகம், யூனிஃபார்ம் என சேர்த்து பிளஸ் 1 சேர்க்கைக்கு மட்டும் 28 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலித்து வருகிறது.அரசு நிர்ணயித்த கட்டணத்தை பள்ளிகள் அமல்படுத்தாததற்கு காரணம் என்ன? இதனை கல்வி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதேன் என்கிற கேள்விகள் பெற்றோர்கள் மத்தியில் எழுந் துள்ளது.

                பள்ளிகள் துவங்க இன்னும் சில தினங்களை உள்ள நிலையில், இனியேனும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? குறைந்தபட்சம் ஒவ்வொரு பள்ளிக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டண விபரத்தை அந்தந்த பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

மாணவர்களுக்கு மோதிரம்

கடலூர்: 

               விருத்தாசலத்தை அடுத்த எருமனூர் வி.இ.டி., எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மாணவர் மணிவேல் 480, பாரதி 473, அகரமுதல்வன் 471 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பெற்றனர்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கார்த்திகேயன் பஸ் உரிமையாளர் ரவீந்திரன், பழனியப்பா ஜூவல்லரி உரிமையாளர் கோபால் ஆகியோர் இணைந்து தங்க மோதிரம் பரிசாக வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் வி.இ.டி., கல்விகுழும தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோரும் பாராட்டினர்.

Read more »

இலவச நாடி மருத்துவ முகாம்

புவனகிரி: 

                     புவனகிரியில் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் இலவச நாடி மருத்துவ முகாம் நடந்தது. புவனகிரியில் இறைவழி மருத்துவ ஆராய்ச்சி அருட்பெருஞ்ஜோதி மருத்துவ மையம் மற்றும் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் இணைந்து முதல் முறையாக இலவச நாடி மருத்துவ முகாம் நடந் தது. புவனகிரியை சுற்றியுள்ள பெருமாத்தூர், பூதவராயன்பேட்டை, அழிச்சிக்குடி, உடையூர், கீரப்பாளையம், வடஹரிராஜபுரம், தெற்கு திட்டை, வடக்கு திட்டை, சாத்தப்பாடி, தம்பிக்கு நல்லான்பட்டினம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 250 பேர் முகாமில் பங்கேற்றனர். அவர்களுக்கு இறைவழி மருத்துவர் குமார் தலைமையில் நாடி பரிசோதனை மூலம் உடல் உள்ளுருப்புகளில் ஏற்பட்டுள்ள நோய்களை கண்டறிந்தும், இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக்க ஆலோசனைகளும் வழங்கப் பட்டது. புவனகிரி ஆதிபராசக்தி வழிபாடு மன்ற காப்பாளர் சுப்ரமணியன், மன்ற தலைவர் சஞ்சீவராயர் உள்ளிட்டவர்கள் பயனாளிகளுக்கு மோர், பிஸ்கெட் வழங்கினர்.

Read more »

மக்களை கடனாளியாக்கிவிட்டார் கருணாநிதி : எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன்

சிதம்பரம்: 

                   தேவையில்லாத திட்டங்களை கொண்டுவந்து தமிழக மக்களை கடனாளியாக்கிவிட்டார் கருணாநிதி என எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் பேசினார். தி.மு.க., அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் மாவட்ட பிரதிநிதி மணிவேலன், சின்னக் கடைத் தெருவில் வார்டு செயலாளர் ரமேஷ், தெற்கு சன்னிதியில் வார்டு செயலாளர் வேம்பு, கீழ சன்னதியில் சிவராம தீட்சிதர் தலைமையில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. 

கூட்டத்தில் மாவட்ட செயலாளரான எம்.எல்.ஏ., அருண் மொழித்தேவன் பேசியதாவது:

                 தமிழகத்தில் நடந்துவரும் தி.மு.க., ஆட்சியில் மின்வெட்டு, விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையில்லாத திட்டங்களை கொண்டு வந்து ஒரு லட்சம் கோடி கடனை ஏற்படுத்தி ஒவ்வொருவரும் 15,000 ரூபாய் கடனாளியாக்கி இருக்கிறார் கருணாநிதி. நாட்டு மக்களின் பிரச்னைகள் தீர்க்க முடியாத நிலையில் மேலவை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஜெ., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மணல் விற்பனையும், டாஸ்மாக் கடையும்தான் இன்று நாட்டை காப்பாற்றி வருகிறது. இல்லையென்றால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். சாக்லேட் கொடுத்து பிள்ளை பிடிப்பதுபோல் யார், யாரையோ கட்சியில் சேர்த்துக்கொண்டு அ.தி.மு.க.,வை உடைத்துவிட்டோம் என மாய தோற்றத்தை ஏற்படுத்துவதால் ஜெ., வையோ கட்சியையோ ஒன்றும் செய்துவிட முடியாது. வரும் தேர்தலில் மக்கள் கண்டிப்பாக கருணாநிதிக்கு பாடம் புகட்டுவார்கள் என பேசினார். கூட்டத்தில், எம்.எல்,ஏ. செல்வி ராமஜெயம், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர செயலாளர் தோப்பு சுந்தர், தலைமை நிலைய பேச்சாளர் முருகுமணி, ஜெ., பேரவை மாரிமுத்து, முன்னாள் நகர செயலாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற் றனர். எம்.ஜி.ஆர்., இளைஞரணி ராபர்ட் நன்றி கூறினார்.

Read more »

காட்டுமன்னார்கோவில் சிவன் கோவில் புனித குளம் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்

சிதம்பரம்: 

                  சிவன் கோவில் குளம் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே 9 ஏக்கர் பரப்பளவில் விஸ்தாரமான குளம் உள்ளது. சுண்ணாம்பு குளம் என்று அழைக்கப்படும் இக்குளம் உடையார்குடி அனந்தீஸ்வரன் கோவில் குளமாகும். புனித குளம் தற்போது துர்நாற்றம் வீசும் கழிவுநீர் குட்டையாக மாறிவிட்டது. ஆரம்ப காலத்தில் தெப்போற்சவம் நடத்தப்பட்டது. குளத்தை சுத்தப்படுத்தி படகு சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்கிடையே மீன்வளத்துறை சார்பில் மீன் வளர்த்தும், மீன் குஞ்சு பொறிப்பகமாகவும் பயன்படுத்தியது. நகர வளர்ச்சிக்கேற்ப இயற்கை வளங்கள் சீரழிக்கப்படுவதற்கு உதாரணமாக இந்த குளத்தையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளும் வகையில், குளத்தை சுற்றிலும் கட்டடங்கள் உருவாகியதும், வீடுகள் கட்டப்பட்டும் அதன் கழிவுநீர் இக்குளத்தில் விடப்பட்டு வருகிறது. காட்டுமன்னார்கோவில் நகர கழிவுநீர் கூட அந்த குளத்தில்தான் கலக்கிறது. பஸ் நிலைய கழிவுகள் மற்றும் பல ஓட்டல்கள், வியாபார ஸ்தபானங்களின் கழிவுகள்கூட இந்த குளத்தில்தான் கொட்டப்படுகிறது. குளத்தில் தண்ணீர் வெளியேற்றப்படாமலும், கழிவுநீர் கலப்பதாலும் தண்ணீரின் வெண்மை நிறம் மாறி பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. துர்நாற்றம் பஸ் நிலையத்தில் நிற்க முடியாத அளவிற்கு உள்ளது. எனவே குளத்தில் கழிவுநீர் விடுவதை கட்டுப்படுத்தி, மீண்டும் புனித குளமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பாலமான் வாய்க்கால் ஆக்கிரமிப்பு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் கோரிக்கை

சிதம்பரம்: 

              சிதம்பரம் அருகே பாலமான் வாய்க்காலை ஆக்கிரமித்து குடியிருப்பு கட்டுவதை தடுக்க அரசுக்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மறுமலர்ச்சி வன்னியர் சங்கத்தின் நிறுவன தலைவர் மணிவண்ணன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

                   சிதம்பரம் அடுத்த உசுப்பூர் சாரதாராம் நகரில் தனி நபர் பாலமான் வாய்க்காலை ஆக்கிரமித்து, அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார். இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி பாதிப்பு ஏற் படும் அபாயம் உள்ளது.எனவே சம்மந்தப் பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றிட உரிய நடவடிக்கை எடுப்பதுடன், சாக்கடை மற்றும் செப்டிக்டேங்க் கழிவு நீரும் இந்த வாய்க்காலில் கலக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மர்ம நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி சாக் கடை நீர் பாலமான் வாய்க்காலில் கலப்பதையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூரில் எம்.எச்.ஓ., பணியிடம் காலி: சுகாதாரப்பணிகள் மந்தம்

கடலூர்: 

                      கடலூர் நகராட்சி சுகாதார அதிகாரி பணியிடம் காலியாக உள்ளதால் கடலூரில் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சியில் சுகாதார அதிகாரியாக இருந்தவர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த பணியிடம் காலியாக உள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேல் காலியாக உள்ளதால். சுகாதார அதிகாரியின் கீழ் இயங்கும் நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போது தமிழகம் முழுவதும் போலியான உணவு பொருட்கள், காலாவதியான உணவு பண்டங்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு பல நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் இந்த பணி அடிக்கடி நடத்தப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கடலூர் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள், சைவ, அசைவ ஓட்டல்கள் அதிகம் இருந்தும் இரண்டு நாட்களில் பெயரளவிற்கு ஆய்வு நடத்தப்பட்டு, 60 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக காலாவதி உணவு பொருட்கள் அழிக்கப்பட்டது .தற்போது பள்ளி சேர்க்கை நேரம் என்பதால் பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டிய சுகாதார அதிகாரி இல்லாததால், சான்றிதழ் பெருவதில் காலதாமதம் ஏற்பட் டுகிறது. மேலும் சுகாதா ரம் தொடர்பான பல பணிகள் ஆய்வு செய்ய அதிகாரி இல்லாததால் பணிகள் மந்தமாக நடக்கிறது.

Read more »

நெய்வேலி சுரங்கத்தில் வெளியேறும் தண்ணீரைஅரியகோஷ்டி வாய்க்காலுக்கு திருப்ப கோரிக்கை

பரங்கிப்பேட்டை

               நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை அரியகோஷ்டி வாய்க்காலுக்கு திருப்பிவிட கலெக்டருக்கு ஊராட்சி தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை ஒன்றியம், அரியகோஷ்டி ஊராட்சி தலைவர் கஸ்தூரி ராஜேந்திரன் அனுப்பியுள்ள மனு:
 
                     நெய்வேலியில் விஸ்தரிப்பு செய்யப்படும் பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெறியேற் றப்படும் தண்ணீரை கம் மாபுரம், சாத்தப்பாடி வழியாக அரியகோஷ்டி கடைமடை வாய்க்கால் மூலம் விவசாய பாசனத்திற்கு திருப்பி அனுப்ப வேண் டும். அப்படி செய்தால் புவனகிரி, தம்பிக்குநல் லாண்பட்டினம், ஆதிவராகநல்லூர், மஞ்சக்குழி, தீர்த் தாம்பாளையம், பு.முட்லூர், சின்னகுமட்டி, சம்பந்தம், ஆணையாங்குப்பம், அரியகோஷ்டி உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.

                தற்போது வீராணம் ஏரி பாசனத்தை நம்பி ஒரு போகம் மட்டுமே பயிரிடப்படுகிறது. மழைக்காலங்களில் நெல் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதமடைகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வீணாக செல்லும் நெய்வேலி சுரங்க தண்ணீரை அரியகோஷ்டி வாய்க்கால் பகுதி விவசாயிகள் பயன்படுத்தினால் அந்த பகுதியில் உள்ள சிறு, குறு விவசாயிகளும், ஏழை விவசாய கூலி தொழிலாளர்களும் வறுமையில்லாமல் வாழ்வார்கள். அதனால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம்

பரங்கிப்பேட்டை: 

             பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பழைய மருத்துவமனையில் முதல் மாடியில் உள்நோயாளிகள் சிகிச்சை பெரும் வார்டுகளில் கழிவுநீர் குழாய் மூலம் கீழே உள்ள செப்டிக் டேங்கிற்கு செல்ல வேண்டும். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் மாடியில் இருந்து குழாய் வழியாக வரும் கழிவுநீர் உடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை பின்புறம் உள்ள நெல்லுக்கடை தெரு வழியாக கழிவுநீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவதை தடுக்க சமமந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

Read more »

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் தொழிலாளர் துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தல்


கடலூர்: 

                தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறையில் 30 சதவீதம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
            தமிழ்நாடு தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறை ஊழியர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் நேற்று கடலூர் ஜெயப்பிரியா ஹாலில் நடந்தது. மாநிலத் தலைவர் கிருஷ்ணகுமாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெரால்டு வரவேற் றார். துணைத்தலைவர்கள் பிரான்சிஸ் சேவியர், சாம்பசிவம் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறையில் 30 சதவீதம் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணி இடங்களை நிரப்ப வேண்டும். வாரிய மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் உள்ள சிக்கலை நீக்க வேண்டும். அனைத்து பதவிகளிலும் ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும். கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சட் டம் சீரிய முறையில் அமல் படுத்திட புதிய கட்டமைப்பு உருவாக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் தனசேகரன் நன்றி கூறினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி சமாஜ்வாடி மாணவர் பிரிவு கோரிக்கை

புவனகிரி: 

            கடலூர் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என சமாஜ்வாடி மாவட்ட மாணவர் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
                   தமிழக சமாஜ்வாடி கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட மாணவர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புவனகிரியில் நடந்தது. மாவட்ட மாணவர் பிரிவு செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். அருண்குமார், ஜெயகாந்தன், ராமலிங்கம், செந்தில் குமார், சீனுவாசன், ஜெயக் குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட பேரவை செயலாளர் ரங்கராஜன் வரவேற்றார். கட்சியின் மாநில செயல் தலைவர் இளங்கோயாதவ் பேசினார்.  

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

                  கடலூர் மாவட்டத்தில் சட்ட கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி துவங்க வேண்டும். அரசு நிர்ணய கட்டணத் திற்கு மாறாக நன்கொடை வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். இன்ஜினியரிங் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி முகாம் நிறைவு

கடலூர்: 

                     ரோலர் ஸ்கேட்டிங் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. ரோலர் ஸ்கேட்டிங் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் மே 1ம் தேதி முதல் கடலூர் அண்ணா விளையாட்டரங்கு மற்றும் சில்வர் பீச்சில் நடந்தது. இதில் 44 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனர். இதன் நிறைவு விழா நேற்று முன் தினம் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. அமைச்சூர் ரோலர் ஸ்கேட்டிங் சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அதிகாரி திருமுகம் முன்னிலை வகித்தார். கூடுதல் எஸ்.பி., ராமகிருஷ்ணன் பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக் கங்களை வழங்கி பாராட்டினார்.மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் கருணாகரன், செயற்குழு உறுப்பினர் வாசு, ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், செயலா ளர் சந்திரமோகன் பால் ராஜ், பயிற்சியாளர்கள் அமரேந்திர பிஷ்வால், வெங்கடேஷ், நிர்மல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

சனி, மே 29, 2010

Now, get passports at a place near you

             Getting a passport will soon be easy with the government opening 'Passport Seva Kendras' (PSK) in 77 centres across the country in a year. The first such PSK will be inaugurated in Bangalore on Friday followed by six others by June. One will be a pilot project for three months after which such kiosks will be opened all over the country.

               Seven PSKs will run for next three months and the government plans to open all the 77 proposed PSKs by March 2011, A Manickam, Joint Secretary (Counsellor Passports and Visas of MEA), told reporters here. Out of the 77 centres, three each will be in Delhi, Chennai and Mumbai while two will be in Kolkata. The new system will ensure that an applicant gets the passport three days after his or her police verification is completed. This will ensure that long queues for filing applications for passports become a thing of past.

              "After you enter a PSK for submitting your application, you will be out of it within 45 minutes," Manickam said. "Once you are inside the PSK, a data operator will file your details and you are photographed. Your documents are checked in the second stage and forwarded to Granting Officer who will decide on whether your application can be accepted or not. This will not take more than 45 minutes," he said. After the application is accepted, it will be forwarded to concerned district police headquarters for verification. "The current police verification process is undergoing change. Now police cannot just say the applicant is not there. They have to say where he is," Manickam said. He said such kiosks will be of great help to applicants. "The number of passports issued went up by 2.2 times from 1997 to 2007. This rapid growth is expected to accelerate further with India's fast growing global engagement," he said. The future expected growth is around 18 per cent per annum with passport demand reaching over one crore by 2011.

Read more »

ஒரே மையத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு: மாணவ, மாணவியர்கள் அவதி

சிதம்பரம்:

                   பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால் சிதம்பரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரே மையத்தில் பதிவுசெய்ய மாணவ, மாணவியர்கள் குவிந்தனர். சில மாணவிகள் மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே முகாமில் பதிவு செய்ய தேதி நீட்டிப்பு செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

                          பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மே 26-ம் தேதிதான் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து தலைமை ஆசிரியர்களுக்கு மதிப்பெண்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் பள்ளிகளில் மே 27-ம் தேதி பிற்பகலில்தான் மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மே 28-ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இரு வட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே மையத்தில் பதிவுசெய்ய வேண்டும் என அறிவித்ததால் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை திரளான மாணவ, மாணவியர்கள் குவிந்தனர். 

                 அதிகப்படியான மாணவர்கள் குவிந்ததால் விரைவாக பதிவு செய்யமுடியாமல் அலுவலர்கள் திணறினர். வெயில் அதிகமாக இருந்ததால் பதிவுசெய்ய வந்த மாணவியர்களில் சிலர் மயக்கம் போட்டு விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  கடந்த ஆண்டு அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களிடம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றபின் பள்ளி மூலமாகவே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு சிதம்பரம் நகரில் ஒரே மையத்தில் இரு வட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்ததால் மாணவ, மாணவியர்கள் பதிவு செய்ய நீண்ட நேரம் வெயிலில் வரிசையில் நின்று கடும் அவதியுற்றனர். மேலும் பல மாணவ, மாணவியர்கள் பதிவு செய்ய முடியாமல் திரும்பினர். எனவே வேலைவாய்ப்பு பதிவு முகாம் தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

கடலூரில் இன்று சமையல் எரிவாயு குறைகேட்பு கூட்டம்

கடலூர்:

              கடலூர் மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைகேட்கும் கூட்டம்  சனிக்கிழமை கடலூரில் நடைபெறும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார். கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இக்கூட்டம் இன்று காலை 11 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும். சமையல் எரிவாயு நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெறுவது தொடர்பாக தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மீன் பிடிக்கச் செல்கிறார்கள்

கடலூர்:

                45 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 29) காலை முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கிறார்கள். மீன்கள் இனப்பெருக்கக் காலம் என்பதால், ஏப்ரல் 15-ம் தேதி முதல் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்து இருந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தும் பெரிய படகுகள் மீன்பிடிக்கச் செல்ல வில்லை. பெரிய படகுகள் மீன் பிடிக்கச் செல்லாததால், மீன்வரத்து குறைந்து, விலைகள் சாதாரண நடுத்தர மக்கள் மீன்களை வாங்க முடியாத அளவுக்குத் தாறுமாறாக உயர்ந்து விட்டன. மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், கடலூர் மாவட்ட மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு சில படகுகளில் மீன்பிடிக்கச் செல்கின்றனர். காலை 6 மணிக்குப் பல படகுகள் கடலுக்குள் செல்லும். மீன்பிடித் தடைக் காலத்தில் சுமார் 700 பெரிய படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. 25 முதல் 50 தொழிலாளர்கள் வரை செல்லும் 100 படகுகளும், 8 தொழிலாளர்கள் செல்லும் படகுகள் 100-ம், 6 தொழிலாளர்கள் செல்லும் படகுகள் 400-ம், 4 தொழிலாளர்கள் செல்லும் படகுகள் 100-ம், கடலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாள்களாக மீன் பிடிக்க முடியவில்லை.  பெரிய படகுகள் மீன் பிடிக்கச் செல்வதால் வஞ்சரம், கொடுவா, மத்தி, சங்கரா உள்ளிட்ட மீன்கள் அதிகம் பிடிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீன்வரத்து அதிகமானால், மீன் விலைகளும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.  மீன்பிடித் தடைகாலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணமாகத் தலா ரூ.800 வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். ஆனால் மீன்பிடித் தடைக் காலம் முடிவடையும் நாள் வரை நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்றார்.

Read more »

அக்னி நட்சத்திரம் நிறைவு: பாடலீஸ்வரர் கோயிலில் மூலவரை குளிர்விக்க சிறப்பு பூஜை


கடலூர்:
 
             அக்னி நட்சத்திரம் (கத்திரிவெயில்) வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றதை முன்னிட்டு, கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் மூலவரைக் குளிர்விக்க சிறப்பு பூஜைகள் நடந்தன.கடந்த 14 நாள்களாக வாட்டி வதைத்த, அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரிவெயில், வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. கத்திரிவெயில் காரணமாக கடலூரில் வெப்பம் 106 டிகிரி வரை வெயில் உயர்ந்துள்ளது. கத்திரிவெயிலின் தாக்கத்தை மனிதர்கள் அனுபவிப்பதுபோல், கடவுள்களும் மனமுவந்து ஏற்றுக் கொள்வதாக புராணங்கள் கூறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கோடைக் காலத்தில் குறிப்பாகக் கத்திரிவெயில் தாக்கும் காலத்தில் சிவன் கோயில்களில், மூலவர் விக்கிரகங்களுக்கு மேலே, குளிர்ந்த நீர் இறைவனின் மேல் தாராபாத்திரத்தில் இருந்து தண்ணீர் சொட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். 
 
                   கடலூர் பாடலீஸ்வரர் கோயிலிலும் இதேபோல கடந்த 14 நாள்களாக தாராபாத்திரத்தில் இருந்து குளிர்ந்த நீர் மூலவர் தலையில் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வெள்ளிக்கிழமை தாராபாத்திரத்தை அகற்றி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பூமி குளிரவும், பருவமழை உரிய காலத்தில் பெய்யவும், மக்கள் நலம் பெறவும் வேண்டி, ஆகம விதிகளின்படி பாடலீஸ்வரர் கோயிலில் 108 வெள்ளிக் கலச பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றன. கங்கை, காவிரி, யமுனை, கோதாவரி, சிந்து, சரஸ்வதி, நர்மதை ஆறுகளில் இருந்து தருவிக்கப்பட்ட புனித நீர், 108 வெள்ளிக் கலசங்களில் நிரப்பப்பட்டு இருந்தன. தாமரை வாகனத்தில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் அமர்ந்து இருக்க, எதிரில் புனித நீர் வெள்ளிக் கலசங்கள் வைக்கப்பட்டு, வியாழக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டன.வெள்ளிக்கிழமை புனித நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மீண்டும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கருவறையில் கட்டப்பட்டு இருந்த தாராபாத்திரம் அகற்றப்பட்டது. சிறப்பு பூஜைகளை மகாதேவ குருக்கள் தலைமையில், நாகராஜ குருக்கள், ராஜேஷ் குருக்கள் ஆகியோர் நடத்தினர். இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், கோயில் நிர்வாக அலுவலர் மேனகா, அலுவலக மேலாளர் பாண்டுரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read more »

நடப்பு ஆண்டில் ரூ.3,000 கோடி கல்விக்கடன்: இந்தியன் வங்கி இயக்குநர் தகவல்

                 இந்தியன் வங்கிக் கிளைகளில் நடப்பு ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இந்த வங்கியின் முதன்மை நிர்வாக இயக்குநர் டி.எம்.பாசின் கூறினார். இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் 1,759 கிளைகள் உள்ளன. தென்மாநிலங்களில் மட்டும் 1,186 கிளைகள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையை 2 ஆயிரமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது 757 கிளைகள் உள்ளன. நடப்பு ஆண்டில் மேலும் 28 கிளைகள் திறக்கப்படும்.  தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டில் ரூ.58 ஆயிரத்து 669 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.78 ஆயிரத்து 834 கோடிக்கு வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    கடந்த நிதி ஆண்டில் நாடு முழுவதும் ரூ.2 ஆயிரத்து 300 கோடிக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க தனியாக இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. அதில் புகார் செய்தால் வாடிக்கையாளர்களின் குறைகள் உடனடியாகக் களையப்படும் என்றார்.

Read more »

அண்ணா பல்கலைக்கழக பி.இ. இறுதி ஆண்டு தேர்வு முடிவு வெளியீடு


               பி.இ., பி.டெக்., படிப்புகளின் 8-ம் பருவ (ஏப்ரல், மே) தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளில் 4-ம் ஆண்டு படித்த பி.இ., பி.டெக்., மாணவர்களுக்கு கடந்த ஏப்ரலில் பல்கலைக்கழகத் தேர்வு நடைபெற்றது.  இந்தத் தேர்வின் முடிவுகள்   www.ann​auniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  தேர்வு முடிவு விவரம் சம்பந்தப்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.  இத்தகவலை சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Read more »

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு: தமிழகம் 98.98 சதவீத தேர்ச்சி


சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளியில் வெள்ளிக்கிழமை, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவை ஆவலுடன் பார்க்கும் மா
சென்னை:

              சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. தமிழகத்தில் தேர்வு எழுதிய 17,423 மாணவ, மாணவியரில் 17,245 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.98 சதவீத தேர்ச்சியாகும். சென்னை மண்டலத்தின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 96.18 சதவீதம்.நாடு முழுவதும் உள்ள 8 மண்டலங்களுக்கான முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு புதியதாக கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகள், ஆந்திரம், டையு மற்றும் டாமன், கோவா, கர்நாடகம், கேரளம், லட்சத்தீவுகள், மகாராஷ்டிரம், புதுச்சேரி மற்றும் தமிழகம் ஆகியவை சென்னை மண்டலத்தில் உள்ளன. 

சென்னை மண்டலம்: 

               சென்னை மண்டலத்தில் மொத்தம் 1,16,927 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,12,465 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 96.18 சதவீதம்.  

தமிழகம்: 

                  தமிழகத்தில் உள்ள 193 பள்ளிகளைச் சேர்ந்த 17,452 பேர் பதிவு செய்திருந்தனர். தேர்வு எழுதிய 17,423 பேரில், 17,245 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 178 பேர் தகுதி பெறவில்லை. இது 98.98 சதவீத தேர்ச்சி.ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 17,320 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 17,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.55 சதவீத தேர்ச்சி.கர்நாடகத்தைச் சேர்ந்த 14,288 பேர் தேர்வு எழுதியிருந்தனர். 14,166 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.15 தேர்ச்சி சதவீதம்.கேரளத்த்தில் 41,594 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 41,253 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.18.மகராஷ்டிரத்த்தில் 18,523 பேர் தேர்வு எழுதினர். இதில் 18,135 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.91.புதுச்சேரியில் இருந்து 402 பேர் தேர்வு எழுதினர். இதில் 400 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.50.உடனடித் தேர்வு: தேர்வில் தகுதியடையாதவர்களுக்கு ஜூலை 16-ம் தேதி சிறப்பு உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது. இவர்களுக்கு 5 வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 2 அல்லது 3-வது வாரத்தில் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து அவர்கள் பிளஸ் 1 படிக்கத் தகுதி பெறுவர் என்றார் சென்னை மண்டல இணை செயலாளர் நாகராஜு.இதில் டி முதல் ஏ1 வரை கிரேடு பெற்றுள்ள மாணவர்கள், பிளஸ் 1 படிக்கத் தகுதியுடையவர்கள். மேலும் இ1, இ2 கிரேடு பெற்றுள்ள மாணவர்கள், பிளஸ் 1 படிக்கத் தகுதி பெறாதவர்கள். இவர்களுக்கு 5 வாய்ப்பு தரப்பட்டு, உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது.இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், நடப்புக் கல்வியாண்டில் பிளஸ் 1 சேர முடியாது என்று தெரிகிறது. மாணவரை பிளஸ் 1 சேர்க்கும் விவகாரத்தில் பள்ளி தான் இறுதி முடிவெடுக்கும் என சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 சேர விதிமுறைகள் வெளியீடு:

                 சிபிஎஸ்இ-யில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவர், பிளஸ் 1-ல் தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்க விரும்பும், மாணவர் சேர்க்கை தொடர்பான விதிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் எம்.குற்றாலிங்கம் வெளியிட்டுள்ளார்.அதன்படி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் டி முதல் ஏ1 வரை கிரேடு பெற்றுள்ள மாணவர்கள், தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் சேர்க்கப்படலாம்.மேலும் இ1, இ2 கிரேடு பெற்றுள்ள மாணவர்கள், மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெறாதவர்கள் என்று தெரிவித்துள்ளது.

மதிப்பெண் கிரேடு கிரேடு பாயின்ட்

91-100             ஏ1               10
81-90              ஏ2                9
71-80              பி1                8
61-70              பி2               7
51-60              சி1               64
1-50               சி2               5
33-40              டி                4
21-32             இ1                 ---
20-க்கும்     குறைவு   இ2     ---

Read more »

கடலூரில் தொடரும் கடல் அரிப்பு: மீனவர்கள் படகுகளை கரைக்கு கொண்டு வருவதில் சிக்கல்


கடலூர் தேவனாம்பட்டினத்தில் படகுகளை நிறுத்த முடியாத அளவுக்கு, தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு.
 
கடலூர்:

                கடலூரில் தொடர்ந்து கடல் அரிப்பு நீடிப்பதால், கடலுக்குள் செல்லும் படகுகளை மீனவர்கள் மீண்டும் கரைக்குக் கொண்டு வருதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. லைலா புயல் வீசியதைத் தொடர்ந்து கடலூரில் கடல் அரிப்பு அதிகரித்து உள்ளது. கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் உள்ளிட்ட சில பகுதிகளில் 50 முதல் 100 மீட்டர் தூரத்துக்கு மேல், கடல் வெளிவந்து உள்ளது. தேவனாம்பட்டினத்தில் கடல் அரிப்பைத் தடுக்க கருங்கல் கரை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊருக்குள் கடல் நீர் வருவது தடுக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்தப் பகுதிகளில் படகுகளைக் கரைக்குக் கொண்டு வர முடியாத நிலை உள்ளது.

                  கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. இவை மீனவர்களின் குடியிருப்புப் பகுதிகளில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். கடல் அரிப்பு நீடித்து வருவதால், கடற்கரை ஓரங்கள் 10 அடி ஆழம் வரை பள்ளமாக உள்ளன. படகுகள் நிறுத்தும் மணல் பரப்பு முழுவதும் அரித்துச் செல்லப்பட்டு இருக்கிறது.  இதனால் படகுகளை கரையில் கொண்டு வந்து நிறுத்த முடியாமல் மீனவர்கள் தவிக்கிறார்கள். இதன் காரணமாக கடலூர் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், தங்கள் படகுகளை கடலூர் துறைமுகம் வரை 8 கி.மீ. தூரம் ஓட்டிச் சென்று உப்பனாற்றின் வழியாக உப்பங்கழிகளில் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். துறைமுகத்தின் நோஸ் பாயின்ட் வழியாக சிறிய படகுகள், உப்பனாற்றுக்குள் நுழைந்து வருவதில் சிரமங்கள் இருப்பதாக மீனவர்கள் கூறுகிறார்கள். 

இதுகுறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் வெள்ளிக்கிழமை கூறுகையில், 

                   தற்போது ஏற்பட்டு இருக்கும் கடல் அரிப்பால் கண்ணாடி இழைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களை கரைக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. படகுகளைப் பாதுகாப்புடன் நிறுத்த, தேவனாம்பட்டினம், நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் ஒவ்வொரு நாளும் 8 கி.மீ. தூரத்துக்கு மேல் பயணித்து, உப்பனாற்றுக்குள் வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றார்.

Read more »

சிதம்பரம் தனலட்சுமி வங்கி ஏடிஎம் திறப்பு

சிதம்பரம்:

                 சிதம்பரம் தனலட்சுமி வங்கி கிளையில் நகைக்கடன் சேவை மற்றும் ஏடிஎம் மையம் தொடக்கவிழா அண்மையில் நடைபெற்றது.கிளை மேலாளர் மகேஷ் பத்மநாபன் வரவேற்றார். வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் எஸ்.குமார் ஏடிஎம் மையத்தை திறந்து வைத்து நகைக்கடன் சேவையை தொடங்கி வைத்தார். விழாவில் வர்த்தக சங்க பொருளாளர் மூசா, எம்.எஸ்.வைத்தியலிங்கம், யு.வெங்கடேச தீட்சிதர், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.சிங்காரவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

Rush at employment office

CUDDALORE:

             Thousands of students who successfully completed Plus-Two examinations are flocking the employment office here every day for enrollment. The rush is expected to continue through June and July.

             The enrollment session begins at 8 a.m. goes beyond the closing time, till the last candidate is cleared, according to G. Kannan, District Employment Officer. He told The Hindu that awareness of the need to register was growing every year. Two reasons could be attributed to the trend - the Union government organisations insist on registration numbers given by the employment office; and the State government's financial assistance to candidates who remain unemployed for five years. Mr. Kannan said that as many as 2,636 candidates, a majority of them girls, turned up for registration on Thursday. On Friday, the total was 2,000. To avoid overcrowding, registration was being done in three more centres - Government Girls' Higher Secondary School at Chidambaram, Government boys' HSS at Vriddhachalam and NLC Boys' HSS at Neyveli.

               A database on the candidates was created and each one was given a registration number. The unemployment dole happened to be a major attraction to the candidates as the government provided for disbursement of aid as follows: for SSLC candidates – Rs. 450, Plus-Two – Rs 600, undergraduates – Rs. 900 on a quarterly basis. The process was further streamlined this year in the case of SSLC students. In other words, the schools concerned ought to send details of the candidates to the employment office through the respective Chief Educational Officers. The employment office, in turn, would create a database and allot registration numbers and send the registration cards through the “responsible persons” appointed by the schools.

Read more »

New school buildings inaugurated

CUDDALORE: 

               Collector P. Seetharaman inaugurated new buildings of Dhaya, a special school, built at a cost of Rs.10 lakh here on Thursday. The State government had provided Rs.5 lakh for the construction, and the remaining mobilised through public contributions. Mr. Seetharaman said that of 28,097 differently abled persons identified in Cuddalore district, 4,408 were mentally challenged. It was a matter of concern that the number of mentally challenged happened to be the highest in the blocks of Vriddhachalam, Nallur, Mangalore and Khammapuram. A monthly maintenance allowance of Rs. 500 was being given to 2,030 mentally challenged persons.

Read more »

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் அண்ணா பல்கலை. காலக் கெடு நீட்டிக்குமா?

கடலூர் : 

                     தமிழக அரசு அறிவித்துள்ள முதல் பட்டதாரிக்கான சான்று பெற கால அவகாசம் வேண்டியுள்ளதால், பொறியியல் கல் லூரி சேர்க்கைக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொழில் நுட்பக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக் கீட்டில் சேர்வதற்கான விண்ணப்பம் அண்ணா பல்லைக் கழகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக் கழகத்தில் வரும் 31ம் தேதி மாலை 5.30 மணிக் குள் சேர்க்க வேண்டும். இந்நிலையில் பட்டதாரிகள் எவரும் இல்லாத குடும்பத்திலிருந்து தொழில் நுட்பக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 50 சதவீதத்தை தமிழக அரசே செலுத்தும் என அறிவித்துள்ளது. இதற்கு குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றை தாசில்தாரிடம் பெற்று விண்ணப்பத் துடன் இணைக்க வேண் டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

                    இந்த சான்று பெற மாணவரின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களின் கல்விச் சான்றுகள், விண்ணப்பதாரரின் கல்விச் சான்று மற்றும் மதிப்பெண் பட்டியல் நகலை இணைத்து உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தாரிடம் சான்று பெற்று விண்ணப் பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் கடந்த 26ம் தேதி அன்றுதான் வழங்கப் பட்டது.

                 அதன் பிறகே மாணவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கான சான்று பெற விண் ணப்பித்து வருகின்றனர். தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் வருவாய் தீர்வாய கணக்கு (ஜமாபந்தி) நடைபெற்று வருவதால் வி.ஏ.ஓ., மற்றும் வருவாய் ஆய்வாளர்களை தேடி அலைய வேண்டியுள்ளது. இவை அல்லாமல் மாநிலம் முழுவதும் வி.ஏ.ஓ.., பணியிடங்கள் பல காலியாக உள்ளதால் ஒவ்வொரு வி.ஏ.ஒ.,க்களும் கூடுதல் கிராமங்களை சேர்த்து கவனிக்க வேண்டியுள்ளதாலும் மாணவர்கள், முதல் பட்டதாரி சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

                    அண்ணா பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் இன்றும், நாளையும் (29 மற்றும் 30ம் தேதிகள்) அரசு அலுவலகங்கள் விடுமுறை என்பதாலும் முதல் பட்டதாரிக்கான சான்று பெறாமல் விண்ணப்பித்து வருகின்றனர். அரசின் புதிய உத்தரவு ஏழைக் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சென்றடைய அண்ணா பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 28,097 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர் : 

                  கடலூர் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 97 மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் பேசினார். கடலூர் வன்னியர்பாளையம் தனபாக்கியம் நகரில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான "தயா' பள்ளியின் புதிய கட்டட திறப்பு விழா நடந்தது. கடலூர் கல்வி கழக தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். இந்திரா சீனிவாசன் குத்துவிளக்கேற்றி வைத்தார். உதவி தலைவர் அருணாசலம் வரவேற்றார்.


 பள்ளி மாணவர்களின் வகுப்பறையை திறந்து வைத்து கலெக்டர் சீத்தாராமன் பேசியதாவது:

                     இறைவன் அனைவரையும் ஏதோ ஒரு குறையுடன் தான் படைத்திருக்கிறான். இது இறைவன் நமக்கு வைத்த பரிசோதனை. நாம் பலவீனத்தை ஒதுக்கி பலத்தை கூட்டிக்கொள்ள வேண்டும். இது போன்ற மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளிகள் இனி வராமல் இருக்க வேண்டும். இப்பள்ளிக்கு வரும் சாலையை சீரமைக்க கலெக்டர் நிதி மூலம் 3 லட்ச ரூபாய் வழங்கப்படும். மேலும் காட்டுமன் னார்கோவிலில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளி அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் அதிகமுள்ள ஐந்து மாவட்டங்களில் கடலூர் மாவட்டமும் ஒன்று. மாவட்டத்தில் 28 ஆயிரத்து 97 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட் டுள்ளது. ஆயிரத்து 500 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

                   மாவட்டத்தில் 4 ஆயிரத்து 408 மனவளர்ச்சி குன்றியவர்கள் உள்ளனர். 2009-10ம் ஆண்டு 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 671 ரூபாயில் 3 ஆயிரத்து 558 பேருக்கு உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு புதிய வாகனத்திற்கான சாவியை வள்ளி விலாஸ் பாலு வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் மாவட்ட அலுவலர் சீனுவாசன், ஆடிட்டர் அனந்தராமன், வெங்கடேசன், செயலாளர் கணபதி, வள்ளிவிலாஸ் பாலு, மஹாவீர் மல்மேத்தா, அரிமா திருமலை, கொண்டல்வாணன் உட் பட பலர் பங்கேற்றனர். சீனுவாசன் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior