உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 30, 2010

பிளீச்சங் பவுடர் வாங்கியதில் முறைகேடு

சிதம்பரம்: 

              சிதம்பரம் நகராட்சியில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்று பாமக நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ் குற்றம் சாட்டினார். 

                    சிதம்பரம் நகரமன்றக் கூட்டம் அதன் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு மறைவுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் திமுக உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன் கோரியதன் பேரில் மறைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையிலும், காந்தியடிகள் மறைந்த தினத்தை முன்னிட்டும் கூட்டத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பேசிய விபரம்:ஆ.ரமேஷ் (பாமக)- நகராட்சியில் வாங்கப்பட்ட பிளீச்சிங் பவுடரில் 33 சதவீத காரத் தன்மை இருக்க வேண்டும். ஆனால் 11 சதவீத காரத்தன்மைதான் உள்ளது. இதை அனைத்து நகரமன்ற உறுப்பினர்களையும் அழைத்துச் சென்று நிருபிக்க தயார். இல்லையெனில் பதவியை ராஜிநாமா செய்ய தயார். எனவே இதுகுறித்து நகரமன்றத்தலைவர் ஆய்வு செய்து ஆனையர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                     பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான மானிய நிதி பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்காத நகரின் மையப் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்நிதியை ரத்து செய்து பிற்படுத்தப்பட்ட பகுதி வளர்ச்சிக்கு செலவிட வேண்டும். நகராட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை.தலைவர்: பிளீச்சர் பவுடர் முறைகேடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முகமது ஜியாவுதீன் (இ.காங்)- சிதம்பரம் நகராட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எனவே லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக தொலைபேசி எண்கள் கொண்ட விளம்பர பலகையை  நகராட்சி அலுவலகத்தில் வைக்க வேண்டும்.அப்புசந்திரசேகரன் (திமுக)- சமீபத்தில் பெய்த மழையில் சிதம்பரம் நகரில் உள்ள முக்கியச் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. அதனைச் சீரமைக்க வேண்டும். நகரில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது கொசு ஒழிப்புப்பணியை தீவிரப்படுத்த வேண்டும்.வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (திமுக)- சிதம்பரம் மானாசந்து மேல்நிலை குடிநீர் தேக்க வளாகத்தில் புதிய ஆழ்துளைக்கிணறு அமைக்க வேண்டும். போல்நாராயணன்தெருவில் சாலை மிக மோசமாக உள்ளதால் உடனடியாக புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.ராஜலட்சுமி (திமுக)- காலை வேளையில் நடைபெறும் நகரமன்றக் கூட்டத்தை காலதாமதமாக 12 மணிக்கு மேல் தொடங்குவதால் வீட்டில் சமையல் செய்ய முடியவில்லை. எனவே காலதாமதமாக கூட்டத்தை தொடங்கினால் தலைவர் மதிய சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.ஏ.ஆர்.சி.மணி (திமுக)- நகராட்சிக்கு ரூ.75 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் வருமானத்தைப் பெருக்க நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாதம் வரி மற்றும் குத்தகை இனங்கள் மூலம் ரூ.10 லட்சம் தான் வருமானம் வருகிறது. ஆனால், ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்க ரூ.30 லட்சம் செலவாகிறது.÷பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அரசால் வழங்கப்படும் நிதியை சம்பளத்துக்கு  செலவிடும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் வருமானத்தைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ராஜாமான்சிங் (சுயேட்சை)- சிதம்பரம் நகராட்சியில் புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்.தலைவர்: 4 முறை டெண்டர் விடப்பட்டும் யாரும் எடுக்க முன்வரவில்லை. டெண்டர் விடப்பட்ட பின்னர் பணி தொடங்கப்படும்.இரா.வெங்கடேசன் (திமுக)- சிதம்பரம் நகரில் 500-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மேலாளர் ஜி.செல்வராஜ், மீட்டிங் கிளார்க் காதர்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

திட்டக்குடி அருகே பள்ளிக்குச் சென்ற 5 மாணவ, மாணவியர் மாயம்

கடலூர்: 

                    திட்டக்குடி அருகே பள்ளிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 3 மாணவிகள் மற்றும் 2 மாணவர்களை வியாழக்கிழமை முதல் காணவில்லை. 

                   திட்டக்குடி அடுத்த வேப்பூர் அருகே உள்ள ஐயனார் பாளையத்தைச் சேர்ந்த கொண்டையன் மகள் தேவி (14), ஐயப்பன் மகள் ரம்யா (14), செல்வராஜ் மகள் மகேஸ்வரி (13), தங்கவேல் மகன் சதீஷ் (15), பழநிச்சாமி மகன் பிரபாகரன் (13). வேப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சதீஷ் 10-ம் வகுப்பும், ரம்யா, தேவி, ஆகியோர் 9-ம் வகுப்பும், மகேஸ்வரி 8-ம் வகுப்பும், பிரபாகரன் 7-ம் வகுப்பும் படிக்கிறார்கள்.வியாழக்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்குச் செல்வதாகக்கூறி, வீட்டில் இருந்து புறப்பட்டனர். ஆனால், அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. மாலையில் வீடுகளுக்கும் திரும்பவில்லை. மாணவ மாணவியரின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே வெள்ளிக்கிழமை மேற்கண்ட மாணவ, மாணவியரின் பெற்றோர் வேப்பூர் காவல்  நிலையத்தில் தனித்தனியாகப் புகார்களை அளித்தனர். போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, மாணவ, மாணவியரைத் தேடி வருகிறார்கள். மாணவ, மாணவிரை யாராவது கடத்திச் சென்றனரா அல்லது அவர்களாகவே எங்காவது சென்றனரா என்று தெரியவில்லை. திட்டக்குடி போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோ வேப்பூர் சென்று பெற்றோர்களைச் சந்தித்து விசாரணை நடத்தினார். இச்சம்பவம் திட்டக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more »

அ.தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்: தி.மு.க.வினர் 11 பேர் மீது வழக்கு

கடலூர்: 

              கடலூர் அருகே அ.தி.மு.க. பிரமுகரைத் தாக்கியதாக, தி.மு.க.வினர் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

                      கடலூர் அருகே கே.ஆர். சாவடியைச் சேர்ந்தவர் அ.தி.மு.க. பிரமுகர் பழநிச்சாமி (48). அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் உலகஅரசனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. பழநிச்சாமி வியாழக்கிழமை மாலை செல்லஞ்சேரியில் இருந்து புதுவைக்குக் காரில் சென்று கொண்டு இருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார். செல்லசேரியைச் தாண்டி சிறிது தூரம் சென்றதும், உலகஅரசன் உள்ளிட்ட 11 பேர் பழநிச்சாமியின் காரை வழிமறித்தனர்.  அவர்கள் கார் கண்ணாடிகளை இரும்புக் குழாயால் அடித்து உடைத்தனர். பின்னர் பழநிச்சாமியை கத்தி மற்றும் இரும்புக் குழாயால் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயம் அடைந்த பழநிச்சாமி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.÷இது தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த உலகஅரசன், ராமு, ரவி, தனசேகரன் உள்ளிட்ட 11 பேர் மீது, ரெட்டிச்சாவடி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Read more »

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி: கோட்டாட்சியர் ஆய்வு

கடலூர்:

: கடலூரில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை கோட்டாட்சியர் செல்வராஜ் ஆய்வு செய்தார். கடலூர் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தணிக்கை செய்து வருகிறார்கள். கடலூரில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இப்பணியை கோட்டாட்சியர் செல்வராஜ் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்தார். நிலை அலுவலர்கள் சரியான முறையீட்டு விவரங்களை பெற்றுள்ளனரா எனக் கேட்டறிந்தார். கோட்டாட்சியருடன் கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, வட்டாட்சியர் உள்ளிட்டோர் உடன் சென்று இருந்தனர் என செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

விருத்தாசலம் நகர்மன்ற கூட்டம் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு

விருத்தாசலம்:

                  : விருத்தாசலத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

                       விருத்தாசலம் நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.÷கூட்டம் தொடங்கியவுடன் பஸ் நிலையக் கடைகள், மாட்டுச்சந்தை மற்றும் எடை பார்க்கும் கருவி ஆகியவைகளுக்கான ஏலநாள் முன்னறிவிப்பு இன்றி  ஒத்திவைக்கப்பட்டதன் காரணம் என்னவென்று, அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் காமராஜ், அருளழகன், சந்திரகுமார் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு நிர்வாக காரணங்களால் ஏலத் தேதி ஒத்தி வைக்கப்பட்டது என நகராட்சி ஆணையர் தெரிவித்தார். இதில் திருப்தி அடையாத அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அதன் காரணத்தை நகர்மன்ற தலைவரிடத்தில் கேட்டனர்.÷அப்போது குறுக்கிட்டு பதிலளித்த தி.மு.க நகர்மன்ற உறுப்பினர் ராமு, மன்றத்திற்கு உட்படாத கேள்விகளைக் கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டாமென கூறினார். தொடர்ந்து ஏலம்தள்ளி போனதற்கான காரணங்களை கேட்டுக்கொண்டிருந்த  அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவரிடம் ஆவேசமாக பேசிவிட்டு மேசையில் இருந்த ஒலிவாங்கியை தள்ளிவிட்டு கூட்டத்தினை புறக்கணிப்பதாகக் கூறி வெளிநடப்பு செய்தனர். பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் செயல்படாமல் உள்ளதே என தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியதற்கு, அது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேர்மன் கூறினார்.

                     பின்னர் விருத்தாசலம் சாவடிக்குப்பம் பகுதியில் 50-லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு புதிய ஒப்பந்தப் புள்ளி கோருவது உள்ளிட்ட 54- தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மைக்கை தள்ளி மன்ற சொத்தை சேதப்படுத்தியதாகக் கூறி அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் காமராஜ், அருளழகன், சந்திரகுமார் ஆகிய மூன்று பேருக்கும் அடுத்து வரும் ஒரு கூட்டத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படும் என்று நகர்மன்ற தலைவர் கூறினார்.

Read more »

வீராணம் ஏரி: தலைமைப் பொறியாளர் ஆய்வு

சிதம்பரம்:

                       வீராணம் ஏரி மற்றும் கொள்ளிடக்கரையை தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு தலைமைப் பொறியாளர் அன்பழகன் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் ஆய்வு மேற்கொண்டார்.÷கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் ஆண்டு தோறும் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து பெரும் சேதத்தை விளைவித்து வருகிறது. வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருவதால் ஒவ்வொரு ஆண்டும் முழுக்கொள்ளளவு நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் ஏரியின் மேல்கரை கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் நீர் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்டுதோறும் வெள்ளம் பெருக்கெடுத்து நெற்பயிர்கள் பாதிப்படைகின்றனர். திருநாராயூர் நந்திமங்கலம், அத்திப்பட்டு, சித்தமல்லி உள்ளிட்ட கிராமங்களில் நீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தடுக்கவும், நீரைத் தேக்கி வைக்கவும் புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு தலைமைப் பொறியாளர் அன்பழகனுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். தலைமைப் பொறியாளர் கோரியதன் பேரில் கடலூர் மாவட்ட நிர்வாகம் வெள்ளத்தை தடுக்கவும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் முன்மாதிரி வரைவு திட்டத்தை தலைமைப் பொறியாளருக்கு அனுப்பி வைத்தது. 

                              இந்நிலையில் தலைமைப் பொறியாளர் அன்பழகன் வியாழக்கிழமை மாலை வீராணம் ஏரிக்கரையை ஆய்வு செய்தார். வீராணம் ஏரியின் நீர்மட்டம் எவ்வளவு உள்ளது; எவ்வளவு நீரைத் தேக்கி வைக்கலாம்; ஏரியை தூர்வாரி அகலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். நபார்டு வங்கி உதவியுடன் ரூ.120 கோடி செலவில் கொள்ளிடக்கரையை அகலப்படுத்தி, பலப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையொட்டி தலைமைப் பொறியாளர் அன்பழகன் கொள்ளிடக்கரைப் பகுதியை வெள்ளிக்கிழமையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொள்ளிடக் கரையோரம் உள்ள படுகை நிலங்கள் விவசாயிகளுக்கு சொந்தமானதா வருவாய்த் துறையினருக்கு சொந்தமானதா என பொதுப்பணித்துறை அதிகாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு கேட்டுக்கொண்டார். தலைமைப் பொறியாளருடன் கோட்டப் பொறியாளர் நஞ்சன், செயற்பொறியாளர் செல்வராஜ், வீராணம் ஏரி உதவிப் பொறியாளர்கள் சரவணன், மாணிக்கம், செந்தில்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.

Read more »

முத்துக்குமரனுக்கு நினைவஞ்சலி

சிதம்பரம்: 

                       இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தீக்குளித்து வீரமரணம் அடைந்த முத்துக்குமரனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில்  அண்ணாமலைப் பல்கலை. மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து பூமாகோவில் முன்பு மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடைபெற்ற நினைவு அஞ்சலி கூட்டத்துக்கு தமிழ்நாடு எஸ்சி., எஸ்டி மாணவர் கூட்டமைப்பு தலைவர் எஸ்.மணிகண்டராஜா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பி.அமர்நாத், அமைப்பாளர் மார்க்சியஒளி, துணைத் தலைவர்கள் செல்வம், சரவணக்குமார், தயாநிதி, ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

Read more »

கடலூர் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

கடலூர்:

                  கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர்.  அரசுக் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் அடிப்படை வசதிகள் மோசமாக இருப்பதைக் கண்டித்தும், தரமான உணவு வழங்கக் கோரியும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். பின்னர் இந்திய மாணவர் சங்க கடலூர் மாவட்டத் தலைவர் டி.அரசன், துணைத் தலைவர் எஸ்.சிவபாலன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது: விலைவாசி உயர்வு காரணமாக ஏற்கெனவே மோசமான உணவு வழங்கப்பட்டு வந்த அரசுக் கல்லூரி விடுதிகள் தற்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலான உணவு விடுதிகளில் உணவுப் பட்டியலின்படி உணவு வழங்கப்படுவதில்லை.  விலைவாசி உயர்வு காரணமாக விடுதிகளில் வழங்கப்படும் உணவில் பருப்பு காய்கறிகள் குறைவாக உள்ளன. அரிசியின் தரமும் மோசமாக உள்ளது. 

                    இதனால் மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சராசரி கலோரி உணவு கிடைப்பதில்லை. மாணவர் விடுதிகளுக்கு அரசு வழங்கும் தொகை, தரமான உணவு வழங்கப் போதுமானதாக இல்லை. கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் விடுதிகளில் கழிப்பிட வசதி போதுமானதாக இல்லை. ÷விடுதி சுகாதாரமாக இல்லை என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது. அட்டவணைப்படி உணவு வழங்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Read more »

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

சிதம்பரம்: 

               சிதம்பரத்தை அடுத்த புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

                    இந்நிகழ்ச்சியில் சுமார் 100 மாணவர்கள் பங்கேற்று பள்ளியில் தாம் படித்த வகுப்பறைகள் மற்றும் விளையாட்டுத் திடலையும் சுற்றிப்பார்த்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு  மகிழ்ந்தனர். பின்னர் பள்ளியில் தற்போது படிக்கும் மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கல்வி வளர்ச்சிக்கும், பள்ளி வளர்ச்சிக்கும் உதவி செய்வதாக உறுதியளித்தனர். மேலும் தமக்கு கல்வி புகட்டிய 12 ஆசிரியர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்து பெற்றனர்.÷பின்னர் முன்னாள் மாணவர்கள் சேர்ந்து புவனகிரி சங்கமம் என்ற அமைப்பை  ஏற்படுத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். புதிய நிர்வாகிகள்: தலைவர்- கிரீடு தொண்டு நிறுவனச் செயலர் வி.நடனசபாபதி, துணைத் தலைவர்- சா.ராபர்ட் புருஷோத்தமன், பொதுச் செயலாளர்- ஜி.உதயசூரியன், பொருளாளர்-எம்.ஆறுமுகம், இணை பொதுச்செயலாளர் டி.பாலசந்தர், செயலாளர்கள்- அண்ணாஜோதி, சரவணன், ஞானவள்ளல், கண்ணன், வெங்கடேசன். அன்றைய தினமே புவனகிரி சங்கமம் அமைப்பு சார்பில் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்காக ரூ.4 லட்சம் நிதி திரட்டப்பட்டது. கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் போதிக்க அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இல்லாததால் அவதியுற்றனர். 

                      மாணவர்கள் கோரிக்கைக்கு இணங்க இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உடனடியாக 2 ஆசிரியர்களை மாதம் ரூ.4 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் தாற்காலிகமாக பணியமர்த்த தலைமை ஆசிரியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more »

கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் முப்பெரும் விழா

சிதம்பரம்:

                        சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையம், கடல்வாழ் உயிரியல் அறிவியல் புலமாக நிலை உயர்த்தப்பட்டதை முன்னிட்டு அதிநவீன நூலகம் திறப்பு விழா, அதிநவீன ஆராய்ச்சிக்கூடம் அடிக்கல்நாட்டு விழா, கடல்வாழ் உயிரியல் மருத்துவப் பரிசோதனைக்கான விலங்கின ஆராய்ச்சிக் கூடம் அடிக்கல்நாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

                      விழாவில் சென்னை செட்டிநாடு மருத்துவ நகரத்தின் துணைத் தலைவரும்,  பல்கலை. ஆளவை மன்ற உறுப்பினருமான எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா பங்கேற்று அதிநவீன நூலகத்தை திறந்து வைத்தார். பின்னர் புதிய அதிநவீன ஆராய்ச்சிக்கூடம். மருத்துவப் பரிசோதனைக்கான விலங்கின ஆராய்ச்சிக்கூடம் ஆகியவற்றை திறந்து  வைத்துப் பேசினார்.

அவர் பேசியது: 

                     பரங்கிப்பேட்டையில் 49 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் கடல்வாழ் உயிரின உயராய்வு மைய ஆராய்ச்சிப் பணிகளும், கல்விச்சேவையும் பாராட்டுதற்குரியது. இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மத்திய, மாநில மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெற்ற நிதி ஆதாரங்களைக் கொண்டு 44 ஆராய்ச்சிப் பணிகளை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் வாழும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் அலங்கார மீன் வளர்ப்பு, கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பல சிறு தொழில்நுட்பங்களை இலவசமாக இம்மையத்தின் ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியதாகும் என முத்தையா கூறினார்.விழாவில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமை வகித்துப் பேசுகையில் கடல்வாழ் உயிரியல் அறிவியல் புலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 10வது புலமாக திகழ்கிறது என்றார். பதிவாளர் எம்.ரத்தினசபாபதி வாழ்த்துரையாற்றினார். கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் டி.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புல முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Read more »

வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது

குறிஞ்சிப்பாடி:

                வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 139வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று நடக்கிறது. கடந்த 22ம் தேதி முதல் தருமச்சாலை மற்றும் ஞானசபை மேடைகளில் மகாமந்திரம் ஓதுதல், திருஅருட்பா முற் றோதல் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு வள்ளலார் அவதரித்த மருதூரில் கிராம மக்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. காலை 10 மணிக்கு ஞான சபையில் பார்வதிபுரம் கிராம மக்கள் சன் மார்க்க கொடியை ஏற்றி தைப்பூச விழாவை துவக்கி வைத்தனர்.

                இன்று காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி, நாளை காலை 6 மணி ஆகிய நேரங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது. விழாவையொட்டி காலை 10 மணிக்கு மலிவு விலையில் திருஅருட்பா புத்தகம், மருதூர் தங்கம் விடுதி திறப்பு விழா நடக் கிறது. அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம் வரவேற்கிறார். இந்து அறநிலையத்துறை ஆணையர் சம்பத், அரசு செயலர் முத் துசாமி, இணை ஆணையர் தங்கராஜ் முன்னிலை வகிக்கின்றனர். அமைச் சர்கள் பன்னீர்செல்வம், பெரியகருப்பன் ஆகியோர் புதிய கட்டடங்களை திறந்து வைக்கின்றனர்.
                   எம்.பி., அழகிரி, எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், தொழிலதிபர் பொள் ளாச்சி மகாலிங்கம், குருகுலப் பள்ளி தாளாளர் செல் வராஜ், என்.எல்.சி., சேர் மன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை சத்தியஞான சபை நிர்வாக அதிகாரி நாகராஜன் செய்து வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: தைப்பூச தரிசனத்தை காண லட்சக்கணக் கான மக்கள் வருவர் என்பதால் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமையில் ஐந்து டி.எஸ்.பி.,க்கள், 16 இன்ஸ்பெக்டர்கள், 60 சப் இன்ஸ்பெக்டர்கள், 215 பெண் போலீசார், 325 ஆண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை, வேலூர், திருச்சி, கோவை, தஞ்சாவூர், காரைக்கால் உட்பட பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பில் இரண்டு டாக்டர் கள் கொண்ட மொபைல் மருத்துவமனை திறக்கப் பட்டுள்ளது.

 நாளை இசை விழா: 

                       வட லூரில் திருஅருட்பா இசை சங்கம் சார்பில் நாளை (31ம் தேதி) இசை விழா நடக்கிறது. அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்குகிறார். சீர்காழி சிவசிதம்பரம், வள்ளலார் குருகுலம் பள்ளி தாளாளர் செல்வராஜ் முன்னிலை வகிக்கின்றனர். சிவகாமசுந்தரி குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார். கடலூர் அரசு இசைப் பள்ளி மாணவர்களின் மங்கள இசை, ஆசிரியர் ராமானுஜம் குழுவினரின் மகாமந்திரம் ஓதுதல் நடக்கிறது. காலை 11 மணிக்கு சிவசிதம்பரம் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், ராஜகோபால் அரிமளம் பத்மநாபன், மழையூர் சதாசிவம் குழுவினர் மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. என்.எல்.சி., சேர்மன் அன்சாரி, இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் பிச்சாண்டி, தென்னக பண்பாட்டு மைய உதவி இயக்குனர் முத்து, ஊரன் அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர்.

Read more »

வெலிங்டன் ஏரிக் கரை சீரமைப்பு பணி செப்டம்பரில் முடியும்: அன்பழகன்

திட்டக்குடி:

                   திட்டக்குடி வெலிங் டன் ஏரிக் கரை சீரமைப்பு பணிக்காக 10 கோடி ரூபாய் செலவிடப்பட் டுள்ளதாக, சென்னை தலைமை பொறியாளர் அன்பழகன் கூறினார். திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரிக் கரை 20 கோடி ரூபாய் செலவில் சீரமைக் கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித் துறை (பாசனப் பிரிவு) சென்னை மண்டல தலைமை பொறியாளர் அன்பழகன் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் பணி விபரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் அவர்  கூறியதாவது:

                     வெலிங்டன் ஏரிக் கரை சீரமைப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட 20 கோடியில் இதுவரை 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

                  800 மீட்டர் கரை சீரமைப்பு பணியில் நீர்கசிவு தடுப்பு சுவர் 640 மீட்டர், நீர்வடிகால் 600 மீட்டர், கருங்கல் தடுப்புச்சுவர் 750 மீட்டர், 4.5 அடி உயரத்தில் நீர்புகா களிமண் பகுதி 400 மீட்டர், 1 அடி உயரத்தில் வெளிப் புற மண் பகுதி 150 மீட்டருக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. ஒட்டுமொத்த பணிகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.இந்த பணி கிராம மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் மாதிரி தோற்றம் 15 நாளில் அமைக்கப்படும்.வீராணம் ஏரியிலிருந்து சென்னை மக்களின் குடிநீருக்காக 70 முதல் 77 கன அடி வரை தண்ணீர் எடுக் கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல்- ஜூன் மாத இறுதி வரை இப்பணி நடைபெறும் என்றார். பேட்டியின் போது செயற்பொறியாளர் சின்னராஜ், உதவி செயற்பொறியாளர்கள் நஞ்சன், பிரேம் குமார், நாகராஜ், பாசன சங்க தலைவர்கள் கொத் தட்டை ஆறுமுகம், வேணுகோபால், மருதாச்சலம், சேலம் மாவட்டம் சிறு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் தங்கராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

வீராணத்தில் வெள்ள பாதிப்பு தடுக்கதலைமை பொறியாளர் நேரில் ஆய்வு

காட்டுமன்னார்கோவில்:

                  வெள்ள பாதிப்பை தடுக்க கொள்ளிடம் மற்றும் வீராணம் ஏரியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பாசன பிரிவு தலைமை பொறியாளர் அன்பழகன் ஆய்வு செய்தார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதியில் ஒவ் வொரு ஆண்டும் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க பல்வேறு நிலையில் ஆலோ சனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீராணம் ஏரியின் மேற்கு கரை பலப்படுத்துதல், பாசன வாய்க்கால்கள் தூர் வாருதல் மற்றும் பாழ்வாய்க் கால் ஷட்டர் அமைக்க 24 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது.
                        அதே போல் கொள்ளிடம் ஆற்றின் கரைகள் பலப் படுத்தி தடுப்பணைகள் கட்ட 120 கோடி ரூபாயிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதன்பேரில் வீராணம், கொள்ளிடம் மற்றும் வெலிங்டன் ஏரி பகுதிகளை பாசன பிரிவு தலைமை பொறியாளர் அன்பழகன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கோட்ட பொறியாளர் நஞ்சன், அணைக் கரை செயற்பொறியாளர் பெரியசாமி, சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வராஜ், வீராணம் உதவி பொறியாளர் சரவணன், மாணிக்கம், செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Read more »

விருத்தாசலம் அருகே வயலில் புத்தர் சிலை கண்டெடுப்பு

விருத்தாசலம்:

                   விருத்தாசலம் அருகே வயலில் கிடந்த பழங்கால கருங்கல்லால் ஆன புத்தர் சிலையை விவசாயிகள் கண்டெடுத்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த முகாசபரூர் கிராமத்தில் பெருமாள் கோவில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. அதே பகுதியைச்சேர்ந்த வேல்சாமி, முருகேசன் இருவரது நிலங்களின் வரப்பில் 5 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட பழைய கருங்கல் கிடந்தது. அந்த கல்லை, கோவிலுக்கு எடுத்து சென்று போடலாம் என நினைத்த அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல், அய்யம்பெருமாள், நாராயணன் ஆகியோர் திருப்பியபோது, புத்தர் சிலை என தெரியவந்தது.பின்னர் ஊராட்சித் தலைவர் மதியழகன், வி.ஏ.ஓ., தண்டபாணிக்கு தகவல் கொடுத்தார். ஆர்.ஐ., ஜெயந்தி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் புத்தர் சிலையை பார்வையிட்டு சென்றனர்.

Read more »

வெறிநாய்கள் துரத்திய மான் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சம்

சிறுபாக்கம்:

                       வேப்பூர் அருகே வெறிநாய்கள் துரத்தியதால் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சம் அடைந்த புள்ளி மான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்டு ரோடு பெரியநெசலூர் பகுதியில் அரசு காப்பு காடு உள்ளது. இங்கு மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன. நேற்று மதியம் புள்ளி மான் ஒன்று காட்டை விட்டு வெளியேறி வேப்பூர் அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்திற்கு வந்தது. அதனைக் கண்ட அங்கிருந்த வெறி நாய்கள் துரத்தின. அதில் மிரண்ட புள்ளி மான் வெகுதூரம் ஓடி வேப்பூர் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சமடைந்தது.அதனை நிலைய அதிகாரி ஆறுமுகம், தீயணைப்பு வீரர்கள் கணேசன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பிடித்து வனவர்கள் ஏகாம்பரம், தில்லைக்கோவிந்தனிடம் ஒப்படைத்தனர்.

Read more »

வெள்ளி, ஜனவரி 29, 2010

கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் எண்ணெய் பனை சாகுபடி பயிற்சி

 கடலூர் : 

                கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு எண் ணெய் பனை சாகுபடி குறித்த இரண்டு நாள் பயிற்சி நடந்தது.
 
                       கரும்பு ஆராய்ச்சி நிலைய முனைவர் பாலராஜேந்திரன் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். கடலூர் வட் டார உதவி வேளாண் இயக்குனர்  இளவரசன் வரவேற்றார். துணை இயக்குனர் பாபு எண்ணெய் பனை அபிவிருத்தி திட்டம், பிற மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் அமரேசன் மண் ஆய்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். உற்பத்தி அலுவலர் சாலமன் செல்வசேகர், முன் னாள் பண்ணை வானொலி அலுவலர் துகிலி சுப்ரமணியம், காவேரி பாமாயில் நிறுவன ஒருங்கிணைப் பாளர் நாகப்பன், மாவட்ட பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் எண்ணெய் பனை சாகுபடி குறித்தும், பாமாயில் ஆலைகளுடன் விவசாயிகள் தொடர்பு கொள்ள ஏற்ற வழிமுறைகள் குறித்தும் விளக்கினர். ஏற்பாடுகளை கடலூர் உதவி வேளாண் அலுவலர்கள் ஜெயராமன், ஜெயமணி. பரமசிவம், தெய்வசிகாமணி, பிரபாகரன், காவிரி பாமாயில் நிறுவன அலுவலர் மனோகர் செய்திருந்தனர். கடலூர் வட்டார விவசாயிகள் 50 பேர் பங்கேற்றனர். கடலூர் வேளாண்  அலுவலர் சின்னக்கண்ணு நன்றி கூறினார்.

Read more »

பெண்ணாடம் - செந்துறை அரசு பஸ் இயக்கம்

திட்டக்குடி : 

               பெண்ணாடம்-செந் துறை புதிய வழித் தடத்தில் அரசு பஸ் இயக்க விழா நடந்தது.
 
                       பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் நடந்த விழாவிற்கு தி.மு.க., நகர செயலாளர் குமரவேலு தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி, மாவட்ட இளைஞரணி மதியழகன், நகர இளைஞரணி காதர், செந்துறை தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஆண்டிமடம் எம்.எல். ஏ., சிவசங்கரன் புதிய வழித் தடத்தில் அரசு பஸ்சை இயக்கி வைத்தார்.  

                       நிகழ்ச்சியில் தங்கசீனிவாசன், துணை செயலாளர்கள் முருகேசன், தமிழ்ச்செல்வி, வார்டு செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மனோகரன், ராஜேந்திரன், சுகுணா உட் பட பலர் கலந்து கொண்டனர்.  தினசரி 8 முறை இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Read more »

தாசில்தார் அலுவலகம் முற்றுகை

காட்டுமன்னார்கோவில் : 

                 குடும்ப அட்டைகளை தகுதி நீக்கம் செய்ததால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை யிட்டதால் திடீர் பரபரப்பு ஏற் பட்டது.
 
                 காட்டுமன்னார்கோவிலை அடுத்த கருப் பேரி, குஞ்சமேடு கிராமங்களில் உள்ள 80 பேர் அங்குள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில் இரு கிராமத்தைச் சேர்ந்த80 பேரின் குடும்ப அட்டைகள் நீக்கம் செய் யப்பட்டதால், இவர்களுக்கு ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுத்துள்ளார்.  இதைத் தொடர்ந்து நேற்று மாலை கருப்பேரி மற்றும் குஞ்சமேட்டைச் சேர்ந்த 80 பேர் காட்டுமன்னார் கோவில் தாசில் தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

                    முற்றுகையிட்டவர்களிடம் தாசில்தார் வீரபாண்டியன் பேச்சுவார்தை நடத்தினார். பின்னர் குடும்ப அட்டைகள் நீக்கம் குறித்து விசாரணை செய்து மீண்டும் உங்களுக்கு ரேஷன் பொருட் கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.  இதனால் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக மீண்டும் சம்பத் நியமனம்

கடலூர் : 

                கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக நியமிக் கப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பத் கடலூரில் உள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் அண்ணாதுரை  சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
 
               அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க.,   மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் களை நியமனம் செய்தார். இதில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீண்டும் நியமனம் செய்யப்பட் டுள்ளார். அவைத் தலைவராக அருணாசலம், இணைச் செயலாளராக சுமதி, துணை செயலாளர்களாக முருகுமணி, தவமணி சக்கவரவர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
                      மாவட்ட செயலாளர் சம்பத் நேற்று மாலை கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே உள்ள எம்.ஜி.ஆர்., மற் றும் அண்ணாதுரை சிலைகளுக்கு மாலை அணிவித்தார். முன்னதாக அ.தி.மு.க., தொண்டர் கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, முத்துகுமரசாமி, அண்ணா தொழிற் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன்,விவசாய அணி செயலாளர் காசிநாதன், மருத்துவரணி சீனுவாச ராஜா, வக்கீல் பிரிவு பாலகிருஷ்ணன்,சரவணன், மீனவரணி மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

தலைமுறையை சிறப்பாக உருவாக்கும் பொறுப்பு மாணவிகள் கையில் உள்ளது : நடராஜன்

கடலூர் : 

                     ஒரு தலைமுறையை சிறப்பாக உருவாக்கும் பொறுப்பு மாணவிகள் கையில் தான் உள்ளது என கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் பேசினார்.
 
                 மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கண் காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. வேதியியல்துறை தலைவர் அனுசூயா தலைமை தாங்கினார். சந்திரன் வரவேற்றார்.
 

                   வேலை வாய்ப்புகள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் துவக்கி வைத்து பேசியதாவது:  இன்ஜினியர், டாக்டர் துறைகள் கிடைக்க வில்லை என வருத்தமடையக் கூடாது. எந்த துறை என்பது முக்கியமல்ல. நீங்கள் எடுக்கும் துறையில் "நம்பர் ஒன்'னாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலே உலகம் உங் களை பாராட்டும்.  ஐ.ஏ. எஸ்-  ஐ.பி.எஸ்., மாணவர்கள் கலைக் கல்லூரிகளில் இருந்துதான் அதிகம் வருகின்றனர். நீங்கள் என்ன கனவு காண்கிறீர்களோ அது போல் ஆவீர்கள். நினைப்பதை பெரிதாக நினைக்க வேண்டும்.
 
                      தற்போது நாட்டில் முக்கியமான பதவிகளில் பெண்கள் தான் உள்ளனர். ஜனாதிபதி, சபாநாயகர், காங்., தலைவர் சோனியா உள்ளிட்டவர்கள் பெண் கள்தான். பெண்கள்  நினைத்தால் சமுதாயத்தை மாற்ற முடியும். ஒரு தலைமுறையை சிறப்பாக உருவாக்கும் பொறுப்பு மாணவிகள் கையில் தான் உள்ளது.  அப்போதுதான் ஜனாதிபதி கூறிய வளமான இந்தியா, வல்லரசான இந்தியாவை உருவாக்கமுடியும் என்றார்.
 
                    திருச்சி மண்டலத் துணை இயக்குனர் (வேலை வாய்ப்பு) சுரேஷ் குமார், பயிற்சித்துறை இயக்குனர் நடராஜன், கணிதத்துறை உதவி பேராசிரியர் சாந்தி, மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் ராஜகணேஷ், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் கர்னல் ஜைத்துன் ஆகியோர் பேசினார்.  இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

Read more »

சிறுபாக்கத்தில் தீயணைப்பு நிலையம் ஊராட்சி தலைவர் முதல்வருக்கு மனு

சிறுபாக்கம் : 

                  சிறுபாக்கத்தில் தீயணைப்பு நிலையம் துவங்க வேண்டும் என முதல்வருக்கு ஊராட்சி தலைவர் செந்தாமரைக்கண்ணன் மனு அனுப்பியுள்ளார்.
 
                  திட்டக்குடி தாலுகாவில் சிறுபாக்கம் குறுவட்ட தலைமையிடமாக உள்ளது. இதனை சுற்றி எஸ். புதூர், அரசங்குடி, மாங்குளம், மங்களூர், மலையனூர், ஒரங்கூர் உள்ளிட்ட 40 க்கு மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான ஏழை மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். தீ விபத்து மற்றும் இயற்கை இடர்பாடு காலங்களில் சம்பவ இடத்திற்கு தகவல் தெரிந்து வேப்பூர், திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து வந்து பாதிப்பை சரி செய்வதற்குள் இழப்பீடு அதிகமாக ஏற்படுகிறது.  எனவே, போர்க்கால அடிப்படையில் ஏழைகளின் நலன் கருதி சிறுபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Read more »

புதிய நிர்வாகிகள் தேர்வு

சிதம்பரம் : 

                   தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
 
                   தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க சிதம்பரம் வட்டகிளை கூட்டம் தலைவர் (பொறுப்பு) பொன்னுசாமி தலைமையில் நடந்தது. கலியபெருமாள் முன் னிலை வகித்தார். பன்னீர் செல்வம் வரவேற்றார். செயலர் திருநாராயணன் அறிக்கை வாசித் தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சந்தானம், துணை தலைவர் ராமசாமி, இணைச் செயலாளர் நடராஜன், செயற்குழு உறுப்பினர்களாக செல்வராஜ், கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டனர்.  கவுரவ தலைவர் இப்ராஹிம் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார். வெங்கட்ராமன் நன்றி தெரிவித்தார். ஓய்வு பெற்றவர்களுக்கு சலுகைகள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read more »

சி.என்.பாளையம் சுப்பரமணியர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

நடுவீரப்பட்டு : 

                 சி.என்.பாளையம் சுப்பரமணியர்,  முத்துமாரியம்மன் கோவிலில் இரண்டாம் ஆண்டு சம்பஸ்ரா மற்றும் 108  திருவிளக்கு பூஜை நடந்தது.
 
                            காலை 10 மணிக்கு மஹா கணபதி ஹோமத் துடன் துவங்கி பின்பு சம்பஸ்ரா பூஜை நடந் தது. 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை 4 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத  சுப்பரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாணமும், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடந்தன. பூஜையில் ஏராளமான சுமங்கலிகள் கலந்து கொண்டு அம் மனை வழிபட்டனர். இரவு 9 மணிக்கு சுவாமிகள் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம் மற்றும் ராஜாராம், சரவணன் தலைமையில் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

Read more »

அண்ணாமலை பல்கலை இன்ஜினியரிங் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கட்டிய அரங்கம் திறப்பு

சிதம்பரம் : 

                 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இன்ஜினிரியங் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப் பட்ட அரங்கை துணைவேந்தர் திறந்து வைத்தார்.
 
                 சிதம்பரம் அண்ணாமலை பல்கலை இன்ஜினிரியங் கல்லூரியில் 1950-56ல் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பாக 20 லட்சம் ரூபாய் செலவில் அரங்கம் கட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்கு பதிவாளர் ரத்தினசபாபதி தலைமை தாங்கினார்.  இன்ஜினிரியங் புல முதல்வர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். துணைவேந்தர் ராமநாதன் அரங்கை திறந்து வைத்தார். முன்னதாக மரம் நடுதல், ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம், அன்னதானம், ராணி சீதை ஆச்சி பள்ளியில் சுத்திகரிப்பு குடி நீர் பிளாண்ட், மாணவர்களுக்கு பயிற்சி பட்டரை, நலத்திட்டங்கள் ஆகியன நடந்தது. முன்னாள் மாணவர்கள் குழுவின் தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் கோவிந்தராஜன், செயலாளர் ஆனந்தராஜன், பொருளாளர் சுப்ரமணியன், பால்பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், ராஜாராம் ஆகியோர் விழா ஏற்பாட்டினை செய்தனர்.  ஒரு லட்சம் ரூபாயில் இன்ஜினியரிங் நூல்கள், ஒவ்வொரு ஆண்டும் இன்ஜினியரிங் பயிலும் மாணவி ஒருவருக்கு உதவி தொகை வழங்க அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது.

Read more »

நகராட்சி பள்ளியில் குடிநீர் இணைப்பு திறப்பு விழா

விருத்தாசலம் : 

                   விருத்தாசலம் திரு.வி.க., நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் அரபு எமிரேட் தொழிற் பயிற்சி மையம் சார்பில் இலவச குடிநீர் இணைப்பு திறப்பு விழா நடந்தது.
 
                  தலைமை ஆசிரியர்  தீர்த்தலிங்கம் தலைமை தாங்கினார். தொழிற்பயிற்சி உரிமையாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.  ஆசிரியர் சகுந்தலா வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் அந் தோணிசாமி குடிநீர் இணைப்பை திறந்து வைத்தார். கவுன்சிலர் சாமுவேல் கென்னடி, தீபா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தினம், அறிவியல் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், கல்விகுழு உறுப் பினர்கள் சந்தானம், பாலசுப்ரமணியன், நாராயணன், நரிக்குறவர் சங்க தலைவர் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

ஸ்ரீராமன் பள்ளிக்கு கல்விக்குழு விருது

ஸ்ரீமுஷ்ணம் : 

          ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளிக்கு சிறந்த கிராம கல்விக்குழுக்கான விருது வழங் கப்பட்டுள்ளது.
 
               ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீராமன் காலனியில் உள்ள  ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு 2009-10 ஆண்டிற்கான சிறந்த கிராமக் கல்விக்குழு விருது வழங்கப் பட்டுள்ளது. இந்த விருதினை கடலூரில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில்  முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயா ஆகியோர் கிராம கல்விக்குழு தலைவர் செல்வி, தலைமை ஆசிரியர் உமாதேவி ஆகியோரிடம் வழங்கினர்.

Read more »

செம்மேடு ஊராட்சியில் மனுநீதி நாள் ரூ.8.60 லட்சம் மதிப்பில் உதவிகள்

பண்ருட்டி :

               பண்ருட்டி அடுத்த செம்மேடு ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 8 லட்சத்து 60 ஆயிரத்து 395 ரூபாய்க்கான நலத்திட்டங்களை கலெக் டர் (பொறுப்பு) நடராஜன் வழங்கினார்.
 
                    பண்ருட்டி அடுத்த செம் மேடு ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் நேற்று ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது.  ஊராட்சி மன்ற தலைவர் சாந்திஅர்ச்சுனன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர்                (பயிற்சி) அழகுமீனா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஜெயகுமார், வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், தாசில்தார் பாபு  ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஒ., செல்வராஜ் வரவேற்றார்.
 
 முகாமில் கலெக்டர் நடராஜன்(பொறுப்பு) நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:- 

             செம்மேடு ஊராட்சியின் கோரிக்கையின் பேரில்   30ஆயிரம் கொள் ளவு கொண்ட இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதியதாக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 6 லட்சம் செலவில் புதிய தொட்டி கட்டப்படும்.  செம்மேடு- மேலிருப்பு 1.6 கி.மீட்டர் தார்சாலை அமைக்கும் பணி, செம்மேடு- பேர்பெரியான்குப்பம்  சாலை  பணி யும் துவங்க உள்ளது என்றார்.  விழாவில்  8 லட்சத்து 60ஆயிரத்து 39 5ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நடராஜன்(பொறுப்பு) வழங்கினார்.

Read more »

பெண்ணாடத்தில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

திட்டக்குடி : 

                    பெண்ணாடத்தில் காப்பீட்டு திட்டம் மற்றும் வரும்முன் காப்போம் மருத்துவ முகாமில் ஆயிரத்து 270 பேருக்கு இலவச சிகிச்சையளிக்கப்பட்டது.
 
                பெண்ணாடம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுசுகாதாரத்துறை, நோய் தடுப்புத் துறை சார்பில் வரும்முன் காப்போம் மற்றும் கலைஞர் காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் நேற்று காலை நடந்தது. மாளிகைகோட்டம் ஊராட்சி தலைவர் வசந்தா தலைமை தாங் கினார். நல்லூர் சேர்மன் ஜெயசித்ரா, ஊராட்சி துணைத்தலைவர் வசந்தா, ஒன்றிய கவுன்சிலர் இந்திராகாந்தி முன்னிலை வகித்தனர். நல்லூர் வட்டார மருத் துவ அலுவலர் டாக்டர் பரமேஸ்வரி வரவேற்றார். முகாமில் டாக்டர்கள் தமிழரசன், வலம்புரிச் செல்வன், சீனுவாசன், விஜயபாபு, ரஜினி, மீனா, கண்காணிப்பாளர் முருகதாஸ் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் இருதயம், சிறுநீரகம், காசநோய், எச்.ஐ.வி., கண் உள் ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தனர். இதில் ஸ்கேன் 35, எச். ஐ.வி., 36, சிறுநீர் மற்றும் இரத்தம் 684 உட்பட ஆயிரத்து 270 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளும், 12 பேர் கண்அறுவை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்பட்டனர். முகாமில் நல்லூர் ஆணையர்கள் சந்திரகாசன், ரவிசங்கர்நாத், தலைமை ஆசிரியர் தமிழ்ச் செல்வி, மருந்தாளுனர் முருகன், ஊராட்சி உறுப்பினர்கள் தமிழ்செல்வி, செல்வம், காளிமுத்து உட் பட பலர் பங்கேற்றனர்.

Read more »

அ.தி.மு.க., செயலாளராக இளஞ்செழியன் தேர்வு

சேத்தியாத்தோப்பு : 

                 சேத்தியாத்தோப்பு நகர அ.தி.மு.க., செயலாளராக இளஞ்செழியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
                         சேத்தியாத்தோப்பு நகர அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கான தேர்தல் முன் னாள் அமைச்சர் வளர்மதி, தேர்தல் பொறுப்பாளர் காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழிதேவன், செல்வி ராமஜெயம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.  அப்போது நகர செயலாளர் பொறுப்பிற்கு அ.தி.மு.க., தேர்தல் பிரிவு மண்டல செயலாளரான தொழிலதிபர் இளஞ்செழியன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். நகர செயலாளர் பதவிக்கு வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் நகர செயலாளராக இளஞ்செழியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதற்கான அறிவிப்பை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

Read more »

மானாவாரி வயல் திருவிழா

ராமநத்தம் : 

                 கீழக்கல்பூண்டியில் உழவர் மன்றம் சார்பில் முத்து சோள பயிர் களை பயிரிட வலியுறுத்தி வயல் திருவிழா நடந்தது.
 
            கீழக்கல்பூண்டி உழவர் மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். உழவர் மன்ற தலைவர்கள் ஆலத்தூர் ரவிச்சந்திரன், மேலக்கல்பூண்டி விஜயகுமார் முன்னிலை வகித்தனர். கீழக்கல்பூண்டி உழவர் மன்ற பொருளாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணி விழாவினை துவக்கி வைத்து விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும், அரசு வழங்கும் மானியங்கள் குறித்தும் விளக்கினார். நாமக்கல் மாவட்ட சின்ஜெண்டா மக்காச் சோள நிறுவன அதிகாரிகள்  மானாவாரி நிலங்களில் மக்கா சோள பயிர் களை பயிரிடுவது, அதன் மூலம் அதிகளவு வருவாய் ஈட்டுவது  குறித்து விளக்கினர்.

Read more »

சாரணர் முகாம்

கடலூர் :

              கடலூர் அக்ஷர வித்யாஷரம் பள்ளியில் சாரண, சாரணியர் முகாம் நடந்தது. இருதயராஜ் முகாமை கொடியேற்றி துவக்கி வைத்தார். பள்ளியின் துணை முதல்வர் மேத்யூ ஜெயரத்னம் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை மேலா ளர் ரமணி ஷங்கர், பள்ளி தாளாளர் விஜயலட்சுமி, இளையபெருமாள் மற்றும் ஆசிரியர் கள்,  சாரண, சாரணியர் கள் 60 பேர் பங்கேற்றனர்.

Read more »

துவக்க விழா

ராமநத்தம் : 

                     ராமநத்தம் அடுத்த தொழுதூரில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா நடந்தது.
 
                  தொழுதூர் ஊராட்சி தலைவர் வளர்மதி தலைமை தாங்கினார். தொழுதூர் ஒன்றிய கவுன்சிலர் நாராயணசாமி, உழவர்மன்ற தலைவர்கள் மேலக்கல்பூண்டி விஜயகுமார், ஆலத்தூர் ரவிச்சந்திரன், நாம் அமைப்பு வேணுகோபால் முன்னிலை வகித்தனர். கீழக்கல்பூண்டி உழவர் மன்ற தலைவர் ரவிச் சந்திரன் வரவேற்றார். திட்டக்குடி தாசில்தார் கண்ணன் குத்துவிளக்கு ஏற்றினார்.துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மைத் துறை) மணி கலந்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார். கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் பாலு, உதவியாளர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நெல் கொள் முதல் நிலைய உதவியாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Read more »

புகைப்பட கண்காட்சி

நெய்வேலி : 

               மந்தாரக்குப்பத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.
 
                     அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் கலாசார சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், யு.டி.யு.சி. தொழிற்சங்கம் இந்த புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கண்காட்சியின் முடிவில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் பாபு தலைமை தாங்கினார். கம்யூ., கட்சியின் கடலூர், விழுப்புரம் மாவட்டக் குழு உறுப்பினர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் செல்வம், ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

நடராஜர் கோவில் தெற்கு வாயிலை திறக்க ஏழைகள் முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் : 

                      சிதம்பரத்தில் நந்தனார் நுழைந்த நடராஜர் கோவில் தெற்கு வாசலை திறக்க கோரி ஏழைகள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
                         சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.  மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட பிற்படுத்தப்பட்ட பேரவை தலைவர் தனசேகரன், ஜோசப் ராஜ் முன்னிலை வகித்தனர். ஏழைகள் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுணன், மக்கள் குடியரசு கட்சி தலைவர் திருவள்ளுவன், பிற்படுத்தப் பட்டோர் பேரவை பொது செயலாளர் வீரவன்னியராஜா, உரிமை கோருவோர் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் கோபாலகிருஷ்ணன், ஆதிதிராவிட நல சங்க நிறுவனர் அன்புதீபன், ஆதிதிராவிட முன் னேற்ற கழக தலைவர் மாமல்லன் கண்டன உரையாற்றினர். தமிழ்தேசிய காங்., மாநில தலைவர் லோகநாதன், மக்கள் தேசம் கட்சி தலைவர் ராசிக்பரித் கோதண்டபாணி, பாட்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.

Read more »

கால்நடை மருந்து குடோனில் தீ விபத்து

கடலூர் : 

                     கடலூரில் கால்நடை மருந்து குடோனில் ஏற் பட்ட தீ விபத்தில்  மருந்து பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
 
                     கடலூர் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் சொரக் கால்பட்டு வான்டர் லேன் தெருவில் கால்நடைகளுக்கான கணேஷ் மெடிக்கல் ஏஜென்சி வைத்துள்ளார். கடலூர், திருவண் ணாமலை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு மொத்த மருந்து விற்பனை செய்து வருகிறார். இவரது மருந்து குடோன் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்ரமணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மருந்து குடோனில் இருந்த ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள மருந்து பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.  இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

வீட்டில் புகுந்து திருட்டு மூன்று பேர் கைது

கிள்ளை : 

                சிதம்பரம் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து பொருட்களை திருடிச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
 
              சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர்  கலியபெருமாள். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தார்.   அப்போது அதே ஊரைச் சேர்ந்த கருணாநிதி(30). பாஸ்கர்(45). பாலமுருகன்(30). மூவரும் வீட்டின் ஓடுகளை பிரித்து விட்டு பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரின் கிள்ளை சப் இன்ஸ் பெக்டர் வினாயகமுருகன் வழக்கு பதிந்து கருணாநிதி, பாஸ்கர், பாலமுருகன் மூவரையும் கைது செய்தார்.

Read more »

நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயற்சி

விக்கிரவாண்டி : 

                போலீசார் தன் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக  மிரட்டியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
 
                   வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(48). இவர் மீது பல திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. கடந்த மூன்று  தினங்களுக்கு முன் போலீசார், தனது மனைவி மற்றும் குழந்தைகளை மிரட்டியதாக கூறி நேற்று காலை 9.30 மணியளவில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார். விக்கிரவாண்டி போலீசார், தீயணைப்பு அதிகாரிகள், ஊராட்சித் தலைவர் வசந்தி நாகராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
                  வழக்குகள் குறித்து தன்னை போலீசார் தொந்தரவு செய்ய கூடாது என எழுதி தர வேண்டும் என்று வருவாய் துறையினரிடம் ராஜா கூறினார்.  தீயணைப்பு வீரர் கார்த்திக்  பைப் வழியாக டேங்க் மேல் ஏறினார். அதனை அறிந்த ராஜா கைலியை கிழித்து டேங்க் ஏணியில் சுறுக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதை பார்த்த ராஜாவின் மகள் இளம்தாரகை(15) மயங்கி விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டது.
 
                   மண்டல துணை தாசில்தார்  சோமசுந்தரம், வருவாய் ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் எஸ்.பி.,யிடம் நேரில் அழைத்து சென்று பேச வைப்பதாக கூறியதன் பேரில் சமாதானம் அடைந்து தனது வீட்டிலிருந்து மாற்று துணி எடுத்து வரக்கூறி மதியம் 2.10 மணிக்கு டேங்க் மேலிருந்து இறங்கினார். நான்கரை மணி நேர போராட்டத்தை அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். ராஜாவை போலீசார் வாக்கூரிலேயே விட்டுவிட்டுச் சென்றனர்.

Read more »

ரூ.2.50 லட்சம் திருட்டு: ஆந்திர வாலிபருக்கு சிறை

கடலூர் : 

               மோட்டார் பைக்கை திருடிய வாலிபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது.
 
                வாழப்பட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடலூரில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.  கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி, கடலூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில், கம்பெனி பணம் 2.50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, மோட்டார் பைக்கின் டேங்க் கவரில் வைத்துள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த ஒருவர் உங் கள் பணம் கீழே கிடக்கிறது என கூறவே, வெங்கடேசன் கீழே கிடந்த 10 ரூபாய் நோட்டுகளை எடுத்துவிட்டு, டேங்க் கவரை பார்த்த போது  பணம் காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். புகாரின் பேரில் கடலூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
 
                     விசாரணையில்  ஆந் திரா மாநிலம் ஓ.ஜி., குப் பத்தை சேர்ந்த கோவிந் தசாமி மகன் குமார்(22) பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் குமாரை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ், குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Read more »

வீட்டுக்கு தீ வைப்பு: 20 பேர் மீது வழக்கு

பண்ருட்டி : 
                 
               பண்ருட்டியில்  குடிசை வீட்டிற்கு தீ வைத் தவர் களை போலீசார் தேடி வருகின்றனர்.
 
                   பண்ருட்டி லிங்க்ரோடு சாலையில் குடியிருப்பவர் சங்கர். இவரது குடிசைக்கு அருகில்  உறவினர்கள் தனகோடி, மங்கம்மாள்  குடியிருந்து வருகின்றனர். நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்னையில் வசிக்கும் குமார்  மற்றும்  ஆதரவாளர் கள் 20பேர் குடிசை வீட்டிற்குள் புகுந்து இந்த இடத்தை நாங்கள் வாங்கி விட்டோம் என வீட்டிற்கு தீ வைத்தனர். இதனை தடுத்த  சங்கர் மனைவி முத்துலட்சுமி, மனோகர், அவரது மனைவி லீலா மற்றும் தனகோடி, மங்கம்மாள் ஆகியோர் மீது அக்கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி வீட்டில் இருந்த பொருட் களை சூறையாடினர். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் குமார் உள்ளிட்ட 20பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Read more »

வியாழன், ஜனவரி 28, 2010

விளையாட்டு வீரர்கள் தேர்வில் முறைகேடு : திறமையானவர்கள் புறக்கணிப்பு¬

கடலூர் :

                     மாவட்ட அளவில் விளையாட்டு வீரர்கள் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால், திறமையுள்ள வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மாவட்ட அளவிலான பைக்கா விளையாட்டு போட்டிகள் டிசம்பர் மாதம் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந் தது. இதில் 13 ஒன்றியங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங் கேற்றனர். கோ-கோ, கபடி, ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து உட்பட பல போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெறும் வீரர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார் கள் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.இதில் விருத்தாசலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கபடி மற்றும் ஹாக்கி போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். அதே போல் கால்பந்தில் இரண்டாமிடமும், கோ-கோவில் மூன்றாமிடமும் பெற்றனர்.

                    இந்நிலையில் மாநில அளவிலான பைக்கா ஹாக்கி, கபடி போட்டிகள் கரூரில் கடந்த வாரம் நடத்தப்பட்டு தேசிய அள வில் பங்கேற்கும் வீரர் கள் தேர்வும் முடிந்துள்ளது. இதில் பங்கேற்ற கடலூர் மாவட்ட அணிக்கு விருத் தாசலம் அரசு மகளிர் பள் ளியைச் சேர்ந்த ஒரு மாணவிகள்கூட தேர்வு செய்யப் படாமல், சிபாரிசின் அடிப்படையில் வேறு மாணவிகள் தேர்வு செய்து போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளனர் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள்.மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவோம் என ஆவலுடன் காத்திருந்த உண்மையான திறமையுடைய விருத்தாசலம் பள்ளி மாணவிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.அதே போல் கடலூர் ஒன்றியம் நடுவீரப்பட்டில் நடந்த ஒன்றிய அளவிலான விளையாட்டு போட் டியில் கே.என்., பேட்டை அணி கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்றது.

               ஆனால் இந்த அணியைச் சேர்ந்த வீரர்கள் ஒருவர் கூட கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை கொண்ட அணியே போட் டிகளில் பங்கேற்றுள்ளது. இதனால் ஒன்றிய போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் விரக்தி அடைந் துள்ளனர்.அதே போல் ஒவ்வொறு போட்டிகளுக்கும் வயது வாரியாக வீரர்கள் தேர்வு செய்வதிலும் பல்வேறு  முறைகேடுகள் நடந்து வருவதால் திறமையான வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ஒன்றியம், மாவட்டம், மாநில அளவில் 14 வயது, 16, 18, 21 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் வயது சான்றிதழ் மாவட்ட விளையாட்டு கழக செயலாளர் கையெழுத்திட்டு சான்று கொடுத்தால் போதுமானதாக உள்ளது.

               இந்நிலையில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சில உடற்கல்வி ஆசிரியர்கள், அதிகாரிகள் தங்களது பள்ளி அணிகள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் 14 வயது பிரிவு போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்யும் போது தங்களது பள்ளியிலேயே பிளஸ் 2 படிக்கும் 16, 17 வயதுள்ள மாணவர்களை முறைகேடாக தேர்வு செய்து அவர்களுக்கு 14 வயது என சான்றிதழ் கொடுத்து போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர். வேறு சில பள்ளிகளோ, தங்கள் பள்ளியில் படிக்காத திறமையுள்ள வெளி மாணவரை தேர்வு செய்து பள்ளிகளின் சார்பில் போட்டிகளில் பங் கேற்க வைக்கின்றனஇதனால் விளையாட் டில் திறமை இருந்தும் 14 வயதுடைய மாணவர்கள் வயதில் மூத்த வீரர்களிடம் மோதி தோல்வி அடைந்து வருகின்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு உண்மையான திறமையுள்ள விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து போட்டிகளில் பங் கேற்க செய்தால் விளையாட்டின் தரம் உயரும்.

Read more »

ஜெ., மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

பரங்கிப்பேட்டை :

            அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மீதான தேர் தல் விதிமுறை மீறல் வழக்கு வரும் பிப்., 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., 2006ம் ஆண்டு நான்கு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார். தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என, சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., தடை உத்தரவு பெற்றார். இதனால், பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இதுவரை 26 தடவை, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வசந்தி, பிப்., 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Read more »

கடலூர் அருகே உப்பனாற்றில் படகு கவிழ்ந்தது : 19 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கடலூர் :

                    கடலூர் அருகே உப்பனாற்றில் பள்ளி மாணவ, மாணவியர் சென்ற படகு கவிழ்ந்ததில், 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் அடுத்த நொச்சிக்காடு காலனி, வள்ளலார் நகர், நந்தன் நகர் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து தடம் எண்.32 அரசு டவுன் பஸ், காலை 8 மணிக்கு விடப்படுகிறது;  அதற்கு பிறகு 10 மணிக்கு ஒரு பஸ் விடப்படுகிறது. பஸ்சை தவற விடுபவர்கள், நொச்சிக்காடு உப்பனாற்று வழியாக சங்கொலிக்குப்பம் வரை படகில் சென்று, அங்கிருந்து பஸ் பிடித்து பள்ளிக்கு செல்கின்றனர்.நேற்று காலை 8 மணி பஸ்சை தவறவிட்ட 41 மாணவ, மாணவியர், கயிற்றை கட்டி இயக்கும் படகில் ஏறி அவர்களாகவே படகை இயக்கினர். கரை அருகே வந்த போது திடீரென படகு கவிழ்ந்ததில், மாணவ, மாணவியர் புத்தக பையுடன் தண்ணீரில் விழுந்தனர்.

             அங்கிருந்தவர்கள், தண்ணீரில் மூழ்கிய வித்யா(13), ஜெயசித்ரா(14), சந்திரா(16), விக்னேஸ்வரன்(17), ஜெயேந்திரன்(13), அருள்ராஜ்(13) உட்பட 19 பேரை மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரவிக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி மற்றும் அதிகாரிகள், விபத்து குறித்து மாணவர்களிடம் விசாரித்தனர். ஆழம் இல்லாத பகுதியில் படகு கவிழ்ந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.  பள்ளி நேரத்தில் பஸ் விடப்பட்டால், இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம். கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் தம்புசாமி, துறைமுகம் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Read more »

இரண்டாம் நிலை காவலர் தேர்வு 203 பேருக்கு மருத்துவ சோதனை

கடலூர் :

                       கடலூர் மாவட்டத்தில் 2ம் நிலை காவலர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியைத் தொடர்ந்து நேற்று முதல் மருத்துவ பரிசோதனை துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் 2ம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு கடந்த அக்டோபர் 25ம் தேதி நடந்தது. பின்னர் உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து 156 ஆண்கள், 47 பெண்கள் என 203 பேருக்கு மருத்துவ பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இதில்  30 பெண்கள் உட்பட 55 பேருக்கு நேற்று கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை துவங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று 17 பெண்கள் உட்பட 56 பேருக்கும், 29ம் தேதி 49 ஆண்களுக்கும், 30ம் தேதி 43 ஆண்களுக்கும் பரிசோதனை நடக்கிறது.மருத்துவ பரிசோதனையில் தேர்வு பெறுபவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பயிற்சி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more »

சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு

குறிஞ்சிப்பாடி :

                 வடலூர் ஜோதி நகரில் உள்ள ஜோதி சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அமைச்சர் பன்னீர்செல் வம் உள்ளிட்டோர் பங் கேற்றனர். வடலூர் ஜோதி நகரில் உள்ள ஜோதி சுப்ரமணிய சுவாமி கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 25ம் தேதி மாலையில் கணபதி வேள்வி, நவக்கிரக வேள்வி நடந்தது. அன்று இரவு 8 மணிக்கு முதல் கால வேள்வி, பூர்ணாகுதி மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

               நேற்று முன்தினம் (26ம் தேதி) காலையில் புதிய திருமேனிகள் கரிக்கோலம், இரண்டாம் கால வேள்வியும் நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு அருட்பா அகவல் பாராயணம், 7 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தது. காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபர் சீர்வளர்சீர் குருமகா சன்னிதான சுவாமிகள், முத்துகுமாரசாமி தம்பிரான், மற்றும் சிங்காரவேல் குழுவினர் புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்து மூலவர் சுப்ரமணிய சுவாமி கோபுர கலசத்திலும், நவக்கிரக சன்னதி கலசத்திலும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

                   கும்பாபிஷேகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், ஊரன் அடிகளார், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தெய்வ நிலையம் அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், வடலூர் பேரூராட்சி தலைவர் அர்ச்சுனன், காங்., சேவாதள தவைலர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.

Read more »

ரூ.17 லட்சத்தில்சாலை பணி துவக்கம்

பரங்கிப்பேட்டை :

                     பரங்கிப்பேட்டையில் புதிய சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி சேர்மன் துவக்கி வைத் தார்.பரங்கிப்பேட்டை சலங்குகார தெருவிலிருந்து அன்னங்கோவிலுக்கு நேரடியாக சென் றிட நபார்டு திட்டத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணியை பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் துவக்கி வைத் தார். அவருடன் துணை சேர்மன் செழியன், தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி காண்டீபன், அருள்வாசகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

கொள்ளிடத்தில் பாலம் கட்ட பூஜை

காட்டுமன்னார்கோவில் :

            காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடத்தில் பாலம் கட்ட பூமி பூஜை நடந்தது. கடலூர் மாவட்ட எல் லையான காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் கிராமம் அருகே உள்ள  கொள்ளிடம் ஆற்றை கடந்தால் நாகை மாவட் டம் துவங்கி விடும். இரு மாவட்டங்களை இணைத்திடம் கொள்ளிடம் ஆற்றிலம் பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.          

                      அதனைத் தொடர்ந்து அமைச்சர் பன்னீர்செல் வம் முயற்சியால் கொள்ளிடம் ஆற்றில் 43 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து நில ஆர்ஜிதம் பணி முடிந்து சாலை விரிவாக்க பணிகள் நடந்தது. தற்போது ஆற்றில் பாலம் கட்ட பூமி பூஜை நடந்தது. திட்ட உதவி இயக்குநர் கீதா, கட்டுமான பிரிவு இன்ஜினியர் செல்வம் பங்கேற்றனர்.

Read more »

திட்டக்குடி அடுத்த இளமங்கலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

திட்டக்குடி :

                    திட்டக்குடி அடுத்த இள மங்கலம் பெட்ரோல் பங்க் அருகில் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார் பில் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. பேரூராட்சி தலைவர் மன்னன் துவக்கி வைத் தார். உழவர் மன்றத் தலைவர்கள் வேணுகோபால், ரவிச்சந்திரன், தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு, காங்., மாவட்ட பொதுச் செயலாளர் இளவழகன் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க., விவசாய அணி அமிர்தலிங்கம், காங்., நகர தலைவர் கனகசபை, உழவர் மன்றத் தலைவர்கள் விஜயகுமார், ரவிச்சந்திரன், தேவேந்திரன், விடுதலை சிறுத்தை கவுதமன், பில் கலெக்டர் பழனிவேல், உதவியாளர் ரவிச்சந்திரன், காவலர் முத்துசாமி பங்கேற்றனர்.

Read more »

வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு மூன்று மாதத்திற்கு பிறகு சம்பளம் வழங்கல்

விருத்தாசலம் :

                       கோமங்கலம் ஊராட்சியில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு இரண்டாம் கட்டமாக சம்பளம் நேற்று வழங்கப்பட்டது. விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் ஊராட்சியில் கடந்த அக்டோபர் மாதம் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிகள் நடந்தது. அதில் அப்பகுதியை சேர்ந்த பலர் வேலை செய்தனர். அவர்களுக்கு சம்பளம் ஒரு பகுதி மட்டுமே வழங்கப் பட் டது. ஆனால் அரசிடம் இருந்து முழுத் தொகை பெறப்பட்டது.இதுகுறித்து கடந்த அக்டோபர் மாதமே கலெக்டரிடம் புகார் செய்யப்பட் டது. நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந் நிலையில் நேற்று முன்தினம் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சிலர் இந்த பிரச் னையை எழுப்பியதால் திடீர் சலசலப்பு ஏற்பட் டது.

           மேலும், வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் வழங்காததைக் கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று (28ம் தேதி) விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் வேலை செய்தவர்களுக்கு சேர வேண்டிய பாக்கி சம்பளத்தை வழங்கும் பணி நேற்று மாலை வழங்கப்பட்டது.

Read more »

கண்கள் தானம்

சிதம்பரம் :

            சிதம்பரத்தில் இறந்த இருவரது கண்கள் தானமாக பெறப்பட்டது. சிதம்பரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ருக்குமணியம்மாள் (82), விழல் கட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந் தவர் கல்யாணி அம்மாள் (75). இவர்கள் இருவரும் இறந்தனர். இதையறிந்த சிதம்பரம் காஸ்மா பாலிடன் அரிமா சங்க தலைவர் கமல் கிஷார் ஜெயின், செயலாளர் விஜயகுமார், மனோகரன் ஆகியோர் இறந்தவர்களின் குடும் பத்தாருடன் பேசி கண் களை தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

Read more »

நடராஜர் கோவிலில் மார்ச் 13ல் சிவராத்திரி

சிதம்பரம் :

                       சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா சிவராத்திரி குறித்த பொதுமக்களின் குழப்பத்தை தீர்க்க, பொது தீட்சிதர்கள் சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. விரோதி ஆண்டான இந்த ஆண்டு, வழக்கத்துக்கு மாறாக ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை, இரண்டு கிரகணங்கள் என பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எனவே, மகா சிவராத்திரி கொண்டாடுவதிலும் மக்களுக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பிப்., 12ம் தேதியா, மார்ச் 13ம் தேதியா என்ற குழப்பம் நீடிக்கிறது.

              இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்ச் 13ம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது என, பொது தீட்சிதர்கள் சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.பூலோக கயிலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில், மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை பூஜைகள் முடிந்த பிறகு, மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து விடிய, விடிய கால பூஜைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடத்தப்படும். சிவ தொண்டர்கள், பொதுமக்கள் விரதமிருந்து திருமுறை பாராயணம் பாடியபடி சிவ ஜோதி எடுத்து மகா சிவாலய தரிசனம் நடக்கும்.

Read more »

சிதம்பரம் பகுதிகளில் குடியரசு தின கொண்டாட்டம்

சிதம்பரம் :

                   சிதம்பரம் பகுதிகளில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சிதம்பரம் நகராட்சியில்  சேர் மன் பவுஜியாபேகம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் ராமநதான், காமராஜ் மெட்ரிக் பள்ளியில் மாணவி லஷ்மிசுதா, வீனஸ் பள்ளியில் தாசில்தார் காமராஜ்,  ராமசாமி செட்டியார் பள்ளியில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சீனு, ராமகிருஷ்ணா பள்ளியில் பேராசிரியர் வள்ளியப்பன், பச்சையப்பா பள்ளியில் ஆசிரியர் நடராஜன், ஆறுமுகம் நாவலர் பள்ளியில் அருள்மொழிச்செல்வன், சி.முட்லூர் கல் லூரியில் முதல்வர் (பொறுப்பு) சேரன் கொடியேட்டினர்.


                         மாரியப்பா நகர் சீனுவாச வாண்டையார் உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியர் சின்னதுரை, குஞ்சரமூர்த்தி வினாயாகர் கோவில்தெரு முருகன் தொடக்கபள்ளியில் நிர்வாகி ராஜராஜன், ஓரியண்டல் நர்சரி பிரைமரி பள்ளியில் மூசா, கிள்ளை எம்.ஜி.ஆர் நகர் இருளர் குடியிருப்பு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவகுமாரவேல் கொடியேற்றினர். அண்ணாமலைநகர் பேரூராட்சியில் சேர்மன் கீதா தேசியகொடியை ஏற்றிவைத்தார்.  அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். தில்லை மெட்ரிக் பள்ளியில் கணேஷ், நத்தமேடு பள்ளியில் கிராம கல்விக்குழு தலைவர் கலையரசி, சாத்தப்பாடிபள்ளியில் கிராம கல்விக்குழு தலைவர் கலைச்செல்வி, வல் லம்படுகை பள்ளியில் ஊராட்சி தலைவர் கலையரசன், சிதம்பரம் நெல்லுக்கடை தெருவில் காங்., வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சித்தார்த்தன், இளமையாக்கினார் கோவில் தெருவில் மனித உரிமைகள் கழக  லோகநடேசன், காசுக்கடை தெருவில் காங்., மாவட்ட தலைவர் சச்சிதானந்தம் தலைமையில் தேசிய ஆசிரியர் சங்க பாலசுந்தரம் கொடியேற்றினர்.

                     சிதம்பரம் அடுத்த நான் முனிசிபல் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் ராஜேந்திரன் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பாலு, ஊராட்சி உதவியாளர் மணிமாறன் மற்றும் உறுப்பினர்கள் பஙகேற்றனர். மஞ்கொல்லையில் கிராமத் தில் செந்தில்வேலன் தலைமையில், பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் திருமுருகபொய்யாமொழி, பரங்கிப்பேட்டை ஒன் றிய அலுவலகத்தில் ஆணையர்  சுப்ரமணியன், பேரூராட்சியில் சேர்மன் முகமது யூனுஸ், கிள்ளை பேரூராட்சியில் சேர்ங மன் ரவிச்சந்திரன் கொடியேற்றினர்.

                       தச்சக்காடு பள்ளியில் ஊராட்சி தலைவர் கோபு, சின்னகுமட்டி பள்ளியில் ஊராட்சி தலைவர் நகப்பன், கொத்தட்டை பள்ளியில் ஊராட்சி தலைவர் பழனி, சிலம்பிமங்களம் பள்ளியில் ஊராட்சி தலைவர் சங்கர், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் துணைத் தலைவர் முருகானந்தம், த.வீ.செ. கல்வி நிறுவனங்களின் செயலா ளர் செந்தில்நாதன், எஸ்.பி.ஜி. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் தாளாளர் சவுந்திரராஜன் கொடியேற்றினார். மேல்புவனகிரி ஒன்றியத்தில் சேர்மன் தனலட்சுமி கலைவாணன் கொடி ஏற்றினார்.  மங்களம் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழ்மணி, சுப்ரமணிய பாரதியார் மெட்ரிக் பள்ளியில் தலைமையில் ராஜேந் திர பிரசாத், அரசு மகளிர்பள்ளியில் தலைமை ஆசிரியர் காவேரி, ஆண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் அப்துல் நபி,  பு.சித்தேரி ஊராட்சியில் அதன் தலைவர் சச்சிதானந்தம் கொடி ஏற்றி வைத்தனர்.

                      காட்டுமன்னார்கோவிலில் தாலுகா அலுவலகத்தில் தாசில் தார் வீரபாண்டியன், ஒன்றிய அலுவலகத்தில சேர்மன் ஜெயச்சந்திரன், பேரூராட்சியில் சேர்மன் கணேசமூர்த்தி, குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் மலர்மன்னன், லால் பேட்டையில் சேர்மன் சபியுல்லா கொடி ஏற்றினார். பூவிழந்தநல்லூர் பள்ளியில் ஊராட்சி தலைவர் திரிபுரசுந்தரி, குமராட் சியில் ஊராட்சி தலைவர் எழில்மதி, கலைமகள் பள்ளியில் முதல்வர் வீரமுத்துகுமரன் கொடி ஏற்றினார். சேத்தியய்தோப்பு போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி., ராமச் சந்திரன், சர்க்கரை ஆலையில் அலுவலக மேலாளர் நாராயணசாமி, பேரூராட்சி அலுவலகம் மற்றும் சந்திரா பெண்கள் பள்ளி மற்றும் வடக்குசென்னிநத்தம் பள்ளிகளில் சேர்மன் கணேசன், வீரமுடையாநத்தம் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாரி, அள்ளூர் பள்ளியில் ஊராட்சி தலைவர் ஞானமணி, காவாலக்குடி பள்ளியில் ஊராட்சி தலைவர் தனலட்சுமி கொடியேற்றினர்.

Read more »

ஆசிரியர்களுக்கு வில்லுப்பாட்டு பயிற்சி

ஸ்ரீமுஷ்ணம் :

                    ஸ்ரீமுஷ்ணம் பகுதி ஆசிரியர்களுக்கு வில்லுப் பாட்டு, பொம்மலாட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தது.  காட்டுமன்னார்கோவில் வட்டார வளமையம் சார்பில் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஸ்ரீஆதிவராகநல்லூர் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையம், நாச்சியார் பேட்டை பள்ளி தொகுப் பாய்வு மையங்களில் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்களுக்கான பயிற்சி நடந்தது.ஆசிரியப் பயிற்றுனர் பழனிமுத்து, கீதா ஆகியோர் ஆசிரியர்களுக்கு வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் மூலம் கற்பிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் காமராஜ் இரண்டு மையங் களிலும் நடந்த பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டார். இதில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள 32 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.

Read more »

நெய்வேலி தி.மு.க.,வின் கோட்டை : அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்

நெய்வேலி :

                   என்.எல்.சி., தொழிலாளர்கள் தான் ஆபத்து காலத்தில் உதவுபவர்கள் என தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.  நெய்வேலி நகர தி.மு. க., சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். தலைமை செயற் குழு உறுப்பினர் ராசவன் னியன், நகர தலைவர் சிவந்தான் செட்டி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் வீரராமச்சந்திரன், தொ.மு.ச., பொது செயலாளர் கோபாலன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 
                      
                         நெய்வேலி நகரம் தி.மு.க.,வின் கோட்டை. என்.எல்.சி., தொழிலாளர்கள் தி.மு.க.,வின் தூண் களாக உள்ளனர். தி.மு.க., எதிர்கட்சியாக இருந்தபோதும் கூட தமிழகத்திலேயே அதிக ஓட்டு  வித்தியாசத்தில் அமைச்சர் பன்னீர் செல்வம் இந்த தொகுதியில் வெற்றி பெற்று அசத்தினார். அந்த அளவிற்கு என்.எல்.சி., தொழிலாளர்கள் ஆபத்து காலத்தில் உதவினர்.நமது அரசியல் எதிரிகள் தேர்தலுக்கு தேர்தல் நம்மை அசைத்து பார்க்க முயன்றனர். ஆனால் இனி எப்பொழுதும் அசைக்க முடியாத அளவிற்கு கருணாநிதி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என பேசினார்.மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் பேசுகையில், தமிழை அழிக்க வேண்டும் என்று நினைத்தவர்களின் நினைப்பை அழித்தவர் அண்ணாதுரை. அவரது தளபதியாக இன்றளவும் விளங்கி வருபவர் கருணாநிதி. இயந்திர சொல்லாக இருந்த தமிழ் மொழி எழுத்து சொல்லாக மாறிய வரலாறு தமிழுக்கு உண்டு என பேசினார்.

Read more »

சமத்துவபுரங்களில் பெரியார் சிலை :மங்களூர், நல்லூரில் பணிகள் தீவிரம்

சிறுபாக்கம் :

                            மங்களூர், நல்லூர் ஒன்றிய சமத்துவபுரங்களில் பெரியார் சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.  மங்களூர் ஒன்றியம் கழுதூர், நல்லூர் ஒன்றியம் ஐவதுகுடி பகுதிகளில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலை அருகில் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் பெரியார் சிலை இல்லாத சமத்துவபுரங்களில் உடனடியாக சிலை நிறுவ தமிழக அரசு உத்தரவிட்டது. 

                        இதனையடுத்து சென் னையிலிருந்து  கொண்டு வரப்பட்ட இரண்டு பெரியார் சிலைகளை சமத்துவபுரங்களில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை ஒன்றிய ஆணையர்கள் மங்களூர் ஜெகநாதன், நல்லூர் ரவிசங்கர்நாத் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Read more »

மருத்துவ முகாம்

சிறுபாக்கம் :

                      சிறுபாக்கம் அடுத்த ம.கொத்தனூர் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் இந்திரா தலைமை தாங்கினார்.
                        
                          ஒன்றிய கவுன்சிலர் கல்யாணி, ஊராட்சி துணைத் தலைவர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி உதவியாளர் வேல்முருகன் வரவேற்றார்.மங்களூர் வட்டார மருத் துவ அலுவலர் மகேஸ்வரி தலைமையில் டாக்டர்கள் பிரேம்நாத், பாவாணன், சுரேஷ்குமார், உதயகுமார், ஜெய்சியா, ராஜேஸ்வரி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், காசநோய், இருதயம், ரத்த பரிசோதனை, சிறுநீர், எய்ட்ஸ் உள்ளிட்ட பல் வேறு நோய்களுக்கு 678 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.இதில் சுகாதார ஆய்வாளர்கள் பூவராகவன், லோகநாதன், மருந்தாளுனர் சீனிவாசன், செல்வராஜ், திருவள்ளுவன், சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

கரும்பு அறுவடை இயந்திரம்செயல்விளக்க பயிற்சி

திட்டக்குடி :

                   திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலை நிறுவனத்தின் சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை இயந்திரத்தின் பயன்பாடுகள் குறித்த செயல்விளக்க பயிற்சி கரும்பு விவசாயி கோபாலகிருஷ்ணன் வயலில் நடந்தது. சர்க்கரை ஆலை துணை மேலாளார் (கரும்பு) கார்த்திக்ராஜா தலைமை தாங்கினார். கரும்பு அதிகாரி நடராஜன், ஆய்வாளர்கள் வசந்தகுமார், தெய்வசிகாமணி முன்னிலை வகித்தனர். ஆய்வாளர் ராஜேந்திரன் வரவேற்றார். சர்க்கரை ஆலை துணை பொது மேலாளர் (கரும்பு) செந்தில்குமார் கரும்பு அறுவடை இயந் திரத்தின் செயல்பாடுகள் குறித்த விளக்கமளித்து கரும்பு அறுவடையை துவக்கி வைத்தார். 

Read more »

அச்சுறுத்தும் சாலையோர தரைக் கிணறுகள் நான்கு வழிச்சாலையில் 'திக் திக்' பயணம்

திண்டிவனம் :

                      திண்டிவனத்திலிருந்து, புதுச்சேரி செல்லும் வழியில் சாலை ஓரம் உள்ள தரைக் கிணறுகள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. விபத்துகள் ஏற்படும் முன், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி - திண்டிவனம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக விவசாய நிலங்கள் ஆர் ஜிதம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலங்களில் உள்ள தரைக் கிணறுகள் தற்போது சாலையை ஒட்டி அமைந்துள்ளன. திண்டிவனம் அடுத்துள்ள மொளசூர் கிராமம் அய்யனார் கோவில் அருகில் மூன்று தரைக் கிணறுகள் உள்ளன. இவை, திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி  செல்லும் சாலையின் இடது புறத்தில் உள்ளன. அவ்வழியே செல்லும் வாகனம் சாலையையொட்டி விலகினால், இந்த தரைக் கிணறுகளில் தான் விழ வேண்டிய அபாய நிலை உள்ளது.

                  தற்போது, இத்தரைக் கிணறுகள் உள்ள பகுதியில் சாலை அமைக்கும்  பணி நடைபெறுவதால், வழி மூடப்பட்டுள்ளது. இதனால், கிணறு உள்ள பக்கம் ஒரு சில வாகனங்களே வருகின்றன. நான்கு வழிச் சாலை பணி முடிவடைந்தால், வாகனங்கள் அதிகளவில் செல்லும்.  இதனால், தரைக் கிணறுகளால் விபத்துக்கள் ஏற்படும்.தற்போது, திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் பலர் இரு சக்கர வாகனங்களில் புதுச்சேரிக்கு செல்கின்றனர். ரோட்டை ஒட்டி செல்லும் வாகன ஓட்டிகள், சிறிது விலகினாலும் இந்த கிணறுகளில் தான் விழ வேண்டும். இந்த கிணறுகளால் விபத்து ஏற்படுவதற்கு முன், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

சாலையில் பைக் நிறுத்தி அடாவடிபரங்கிப்பேட்டையில் 'டிராபிக் ஜாம்'

பரங்கிப்பேட்டை :

                      பரங்கிப்பேட்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக பைக்கை நிறுத்தி விட்டு எடுக்காததால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பரங்கிப்பேட்டை சங்குமரத்தடியில்  இருந்து சின்னக்கடை தெரு வரை நெடுஞ் சாலைதுறை சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் அடிக்கடி போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை சஞ் சீவிராயர்கோவில் தெருவில் உள்ள மளிகை கடையில் பொருள் வாங்க வந்த ஒருவர் பைக்கை ரோட்டில் நிறுத்தியிருந்தார். அப்போது எதிரெதிரே பஸ் கள் வந்தது. ஒதுங்க இடம் இல்லாததால் தனியார் பஸ் கண்டெக்டர், ரோட்டில் நிறுத்தியிருந்த பைக்கை எடுக்குமாறு கூறினார். அதற்கு அந்த நபர் பைக்கை எடுக்க முடியாது என கூறினர். அதனால் தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டனர்.

                இதனால் அந்த வழியாக நடந்து செல்லவே முடியாத அளவிற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர். அதனை அறிந்த பைக் ஆசாமி அங்கிருந்து "எஸ்கேப்' ஆகினார். அதன்பிறகு போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் பரங்கிப்பேட்டை - சிதம்பரம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Read more »

ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் 'சஸ்பெண்ட்'

பரங்கிப்பேட்டை :

                    அகல ரயில் பாதை யில் சிக்னல்கள் இயங்காதது குறித்து உயர் அதிகாரிகளிடம் சுட்டிக் காட் டிய ஆலப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சரக்கு ரயில் கள் இயக்கப்பட்டு வருகிறது.  ரயில் வரும் தகவலை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அருகாமையில் உள்ள ரயில்வே கேட் கீப்பர்களுக்கு மொபைல் போன் மூலமே தகவல் கொடுத்து வரப்படுகிறது. ஆய்வு பணிக்கு வந்த உயர் அதிகாரிகளிடம் இந்த குறைகளை சுட்டிக் காட்டிய ஆலப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்  மாஸ்டர் ஜெயராமன், திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Read more »

பிராந்தி பாட்டில் கடத்தியவர் கைது

பண்ருட்டி :

         புதுச்சேரியில் இருந்து பிராந்தி பாட் டில்கள் கடத்தி  வந்தவரை போலீசார் கைது செய்தனர். புதுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கண்டரக்கோட்டையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது கைப்பையில் 6 பிராந்தி பாட்டில் கடத்தி வந்த பண்ருட்டி அடுத்த  கந்தன்பாளையம் சவுந்தரராஜன் (23) என்பவரை கைது செய்தனர்.

Read more »

சிறையில் கைதி கொலையா? ஆர்.டி.ஓ., மறு விசாரணை

கடலூர் :

                          கடலூர் மத்திய சிறையில்  தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட கைதி, கொலை செய்யப் பட்டாரா என்ற கோணத்தில் ஆர்.டி.ஓ., மறுவிசாரணை துவங்கியுள்ளது.சென்னை புளியந் தோப்பு, கனக நாராயண முதலியார் தோப்பை சேர்ந்தவர் பழனி மகன் அமுல் என்கிற அமுல்பாபு (29). திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக் குகளில் சம்பந்தப்பட்ட இவரை, புளியந்தோப்பு போலீசார்  குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். அங்கு அவர், சிறை ஊழியர்களிடம் கஞ்சா கேட்டு தகராறு செய்ததால்,  கடந்த ஜூலை 14ம் தேதி கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.கடந்த ஆக., 3ம் தேதி இரவு கஞ்சா கேட்டு சுவற் றில் தலையை மோதிக் கொண்டு  மயங்கி விழுந் தார்.

                     அவரை, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.மத்திய சிறை கண்காணிப்பாளர் ஜெயராமன் புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்தனர்.  கடலூர் ஆ.டி.ஓ., செல்வராஜ், கைதியின் உறவினர்கள், சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.இந்நிலையில், பிரேத பரிசோதனையில் அமுல் பாபுவின் விலா எலும்புகள் உடைந்துள்ளது தெரிய வந்தது. அதனால், கைதி அமுல்பாபு சிறையில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் ஆர்.டி.ஓ., மறுவிசாரணை நடத்தி வருகிறார்.

Read more »

புதன், ஜனவரி 27, 2010

இந்திரா நகரை தலைமையாக கொண்டு வருவாய் குறுவட்டம் உருவாக்க கோரிக்கை

கடலூர் :

                 நெய்வேலி இந்திரா நகர் பகுதியை மையமாக கொண்டு ஒரு புதிய வருவாய் குறுவட்டத்தை உருவாக்க வேண்டும் என மாவட்ட இளைஞர் காங்., தலைவர் சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

               கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ் சாவடி ஆகிய குறுவட் டத்தை கொண்ட 59 கிராமங்களுடன் குறிஞ்சிப் பாடி தாலுகா உதயமாகியுள்ளது. இதற்கு அமைச்சர் பன்னீர்செல்வத் திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

               குறிஞ்சிப்பாடி தாலுகாவில 59 கிராம நிர்வாகத்துடன் 75க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் இணைந்து 4 லட்சத்திற் கும் மேற்பட்ட மக்கள் தொகையும், 40 கி.மீட்டர் பரப்பளவும் உள்ள பகுதியாகும். தற்போது உள்ள குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி 2 வருவாய் குறுவட்டத்தை வைத்து மக்கள் பணி செய்வது சிரமம். இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், சான்றிதழ்கள் அவர்களை சென்றடைய காலதாமதமாகும். எனவே, நெய்வேலி இந்திரா நகர் பகுதியை மையமாக கொண்ட ஒரு புதிய குறுவட்டத்தை உருவாக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

மருத்துவ காப்பீட்டு திட்டம் புகைப்படம் எடுக்கும் பணி

விருத்தாசலம் :

                    விருத்தாசலம் தாலுகாவில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் பணி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் நடந்து வருகிறது.

இதுகுறித்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                 விருத்தாசலம் தாலுகாவில் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக் கும் பணி இரு கட்டமாக கிராமங்களில் நடந்தது.

                இதில் புகைப்படம் எடுக்க தவறியவர்களுக்கு ஜனவரி 20 ம் தேதி முதல் மூன்று மாதங்கள் வரை விருத்தாசலம் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுக்க தவறியவர்கள் புகைப்படம் எடுக்க வரும் போது ரேஷன் கார்டு, விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்ட அட்டை, தொழிலாளர் நலவாரிய அட்டை கொண்டு வர வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., விடம் இருந்து ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத் திற்கு குறைவானவர்கள் என்று சான்றிதழ் வாங்கி வர வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior